Asianet News TamilAsianet News Tamil

தமிழ் தெரிந்தால் போதும்! கை நிறைய சம்பளத்துடன் அரசு வேலை! இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க!

பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையில் காலியாக உள்ள நிரந்தர முழுக் காவலர், தூய்மைப் பணியாளர், அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்புக்கு டிசம்பர் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Apply for Constable, Cleaner, Office Assistant Vacancy in Tamilnadu Economics and Statistics Department sgb
Author
First Published Nov 20, 2023, 11:20 PM IST | Last Updated Nov 20, 2023, 11:39 PM IST

தமிழ்நாடு பொருளியல் மற்றும் புள்ளியில் துறை சார்பில் புதிய ஆள்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியாக உள்ள நிரந்தர முழுக் காவலர், தூய்மைப் பணியாளர், அலுவலக உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்ட உள்ளனர். ஆர்வமும் தகுதியும் இருப்பவர்கள் இந்த வேலைவாய்ப்புக்கு டிசம்பர் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

வயது வரம்பு:

01.07.2023 அன்று குறைந்தபட்சம் வயது 18 வயது நிரம்பியவர்கள் இந்த வேலைக்கு முயற்சி செய்யலாம். பட்டியல் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 37. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மற்றும் சீர்மரபினருக்கு அதிகபட்ச வயது 32 ஆக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

இந்த வேலைக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். ஆனால், கண்டிப்பாக தமிழில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு! குரூப் பி மற்றும் குரூப் சி பதவிகளுக்கு உடனே அப்ளை பண்ணுங்க!

Apply for Constable, Cleaner, Office Assistant Vacancy in Tamilnadu Economics and Statistics Department sgb

விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு பொருளியல் மற்றும் புள்ளியில் துறையின் des.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் சமீபத்தில் எடுக்கப்பட்ட வண்ண பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை இணைக்க வேண்டும்.

ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், தனித்தனி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். எந்த வேலைக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்று விண்ணப்பத்தில் தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும். தேவையான ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.

பின்வரும் முகவரியில் விண்ணப்பங்களை நேரில் அளிக்கலாம் அல்லது அஞ்சலில் அனுப்பி வைக்கலாம். தகுதியான நபர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் நாள் குறித்த விவரம் பின்னர் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பத்தை அனுப்பவேண்டிய முகவரி:

இயக்குநர், பொருள் இயல் மற்றும் புள்ளிஇயல் துறை, டி.எம்.எஸ்.வளாகம் தேனாம்பேட்டை, சென்னை - 600006,

விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 5.12.2023 (மாலை 5.45 மணிக்குள்)

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இனிமே வேற மாதிரி இருக்கும்! புது அப்டேட்டில் அப்படி என்ன இருக்கு?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios