Asianet News TamilAsianet News Tamil

எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு! குரூப் பி மற்றும் குரூப் சி பதவிகளுக்கு உடனே அப்ளை பண்ணுங்க!

பட்டியல் மற்றும் பழங்குடியின பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் தேர்வுக்குப் பின் விண்ணப்பக் கட்டணம் திருப்பித் தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் கட்டணமின்றி இந்தத் தேர்வுக்கு விண்ணபிக்க முடியும்.

AIIMS Delhi Recruitment 2023: Apply Online for 3036 Group B and C Vacancies at aiims.edu sgb
Author
First Published Nov 20, 2023, 10:33 PM IST | Last Updated Nov 20, 2023, 10:49 PM IST

3000 க்கும் மேற்பட்ட குரூப் பி மற்றும் சி காலி பணியிடங்களுக்கு டெல்லி எய்ம்ஸ் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த ஆள்சேர்ப்பு நடவடிக்கை மூலம் டெக்னிசியன், தட்டச்சு எழுத்தர், சமூக பணியாளர், பல்நோக்குப் பணியாளர் என பல பணிகளுக்கு ஆட்கள் தேர்வுசெய்யப்பட்ட உள்ளனர்.

மொத்தம் 3036 காலிப் பணியிடங்கள் உள்ளன. ஆசிரியர் அல்லாத குரூப் பி மற்றும் குரூப் சி பதவிகளில் தகுதியானவர்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளனர். வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதி குறித்த விவரங்கள் வெவ்வேறு பணிகளுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. அதிகாரபூர்வ அறிவிப்பில் அவற்றை முழுமையாகப் பார்த்துக்கொள்ளலாம்.

பொது மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.3000. பட்டியல்,  பழங்குடியினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு ரூ.2400 விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படும்.

வினி ராமனையும் விட்டு வைக்காத வன்ம கும்பல்... மேக்ஸ்வெல் மனைவியை டார்கெட் செய்து மிரட்டல்!

AIIMS Delhi Recruitment 2023: Apply Online for 3036 Group B and C Vacancies at aiims.edu sgb

பட்டியல் மற்றும் பழங்குடியின பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் தேர்வுக்குப் பின் விண்ணப்பக் கட்டணம் திருப்பித் தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் கட்டணமின்றி இந்தத் தேர்வுக்கு விண்ணபிக்க முடியும்.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எய்ம்ஸ் நிறுவனத்தின் creaiims.aiimsexams.ac.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பின்வரும் இணைப்பை கிளிக் செய்து அதிகாரபூர்வ அறிவிப்பை டவுன்லோட் செய்யலாம்.

Common Recruitment Examination for AIIMS (CRE-AIIMS) for Recruitment to the various Group-B & C posts at Participating AIIMS

எய்ம்ஸ் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 01.12.2023 (மாலை 5 மணிக்குள்). விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் நள்ளிரவுக்குள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திவிட வேண்டும். எழுத்துத் தேர்வு ஆன்லைனில் 18. 12. 2023 அன்று நடைபெறும்.

லேப்டாப்பில் எதுவும் ஸ்டோர் பண்ண முடியாது! விரைவில் வருகிறது ஜியோ கிளவுட் லேப்டாப்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios