2024 டான்செட் தேர்வு முடிவுகள் வெளியீடு: அண்ணா பல்கலை. இணையதளத்தில் ரிசல்ட்டை செக் பண்ணுங்க!

டான்செட் (TANCET) எனப்படும் இந்த் தேர்வு அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டு வருகிறது. 2024ஆம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது. tancet.annauniv.edu என்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்தத் தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம்.

Anna University releases Results of TANCET 2024 exam sgb

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கும் இன்ஜினியரிங் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.பிளான், எம்.ஆர்க் போன்ற முதுநிலை படிப்புகளில் சேருவதற்கும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

டான்செட் (TANCET) எனப்படும் இந்த் தேர்வு அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டு வருகிறது. 2024ஆம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது. tancet.annauniv.edu என்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்தத் தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம்.

எம்பிஏ மற்றும் எம்சிஏ தேர்வர்கள் ஈமெயில் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி லாக்-இன் செய்து தங்கள் மதிப்பெண்களைச் தெரிந்துகொள்ளலாம்.

கருந்துளை ஆராய்ச்சியில் புதிய மைல்கல்! EHT தொலைநோக்கி பதிவுசெய்த புதிய படங்கள்!

Anna University releases Results of TANCET 2024 exam sgb

டான்செட் மற்றும் சிஇஇடிஏ பிஜி தேர்வுகளுக்கான மதிப்பெண் சான்றிதழை ஏப்ரல் 3 முதல் மே 3 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

டான்செட் தேர்வு இரண்டு ஷிப்டுகளில் நடத்தப்பட்டது. முதல் ஷிப்டில் எம்சிஏ (MCA) தேர்வு காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடந்தது. இரண்டாவது ஷிப்டில், பிற்பகல் 2:30 முதல், மாலை 4:30 மணி வரை எம்பிஏ (MBA) நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்த ஆண்டு எம்சிஏ தேர்வு எழுத 9,206 பேரும், எம்பிஏ தேர்வு எழுத 24,814 பேரும் விண்ணப்பித்திருந்தார்கள். முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான CEETA தேர்வு மார்ச் 10ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கு 5,281 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

மாணவர்கள் சுயவிவரத்தில் சிறிய திருத்தம் செய்ய விரும்பினால் tanceeta@gmail.com ஈமெயிலுக்கு உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இரண்டு தேர்வுகளுக்கும் பொது கலந்தாய்வு நடத்தப்படும். அதற்காக அட்டவணை மற்றும் கலந்தாய்வு செயல்முறை விரைவில் வெளியிடப்படும்.

இன்ஸ்டாகிராமில் புதுசா வந்த வானிஷ் மோட்! எப்படி யூஸ் பண்றதுன்னு தெரிஞ்சுகோங்க!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios