அப்படிபோடு.. மருத்துவ கலந்தாய்வை போல புதிய நடைமுறையை கொண்டு வந்த அண்ணா பல்கலைக்கழகம்.!
தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்கள், பொறியியல் சேர்க்கை சேவை மைய பணியார்களுக்கான பயிற்சி அண்ணா பல்கலைக்கழத்தில் நடைபெற்றது.
பொறியியல் படிப்புகளில் காலி இடங்களை நிரப்ப மருத்துவ கலந்தாய்வு போல் புதிய கலந்தாய்வு நடைமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்கள், பொறியியல் சேர்க்கை சேவை மைய பணியார்களுக்கான பயிற்சி அண்ணா பல்கலைக்கழத்தில் நடைபெற்றது. இவர்களுக்கு தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் புருசோத்தமன் பயிற்சி அளித்தார். அப்போது, வழக்கமான பயிற்சிகளுடன் கலந்தாய்வுக்கான புதிய நடைமுறைகளை குறித்த பயிற்சிகளும் வழங்கப்பட்டன. வரும் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் காலியிடங்களை தவிர்ப்பதற்கு புதிய கலந்தாய்வு நடைமுறைகளை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- தேர்வர்களே அல்ர்ட் !! தொழில்நுட்ப கோளாறு காரணமாக CUET நுழைவுத்தேர்வு ரத்து.. மாற்று தேதியை அறிவித்த என்டிஏ
அதன்படி ஒரு மாணவர் கல்லூரியை தேர்வு செய்துவிட்டு 7 நாட்களுக்குள் அவர் கல்லூரியில் சேர்ந்துவிட்டாரா என கண்காணிக்கவும், அவர் கல்லூரியில் சேரவில்லை என்றால் மீண்டும் 2-ம் கட்ட கலந்தாய்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் அந்த காலியிடம் நிரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் ரூ.5,000 பதிவு கட்டணம் செலுத்தாமல் நேரடியாக கல்லூரிக்கு சென்று அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை செலுத்தி அவர்களுக்கான இடத்தை உறுதி செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- அலர்ட்!! UPSC மெயின் தேர்வு தேதிகள் அறிவிப்பு.. தேர்வர்கள் அறிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..