ரூ.40,000 சம்பளம் : இந்திய விமானப்படையில் வேலை.. கடைசி தேதி எப்போது? முழு விவரம் இதோ..

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள அக்னி வாயுவீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Agniveer Vayu Recruitment 2023 Rs.40,000 Salary : Indian Air Force Job.. Here is the full details..

அக்னி வீர் வாயு ஆட்சேர்ப்பு 2023க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் agnipathvayu.cdac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். திருமணமாகாத ஆண் மற்றும் பெண், 23 வயதுக்குட்பட்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஜூலை 27 இந்த ஆட்சேர்ப்பு தொடங்கிய விண்ணப்ப செயல்முறை ஆகஸ்ட் 17-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அக்னிவீர் வாயு தேர்வு அக்டோபர் 13, 2023 நடைபெறும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். 

முக்கிய தேதிகள்

அறிவிப்பு வெளியான தேதி : 11 ஜூலை 2023
விண்ணப்பப் பதிவு தொடக்கம் : 27 ஜூலை 2023
விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி ஆகஸ்ட் 17, 2023
தேர்வு தேதி : 13 அக்டோபர் 2023

15,000 காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்; இளைஞர்களுக்கு கோவை ஆட்சியர் அழைப்பு

அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு 2023 : சம்பள விவரங்கள்
குறைந்தபட்ச சம்பளம் ரூ 30,000
அதிகபட்ச சம்பளம் :  ரூ. 40,000

விமானப்படை அக்னிவீர் காலியிடத்திற்கு ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?

  • படி 1: https://agnipathvayu.cdac.in/ என்ற விமானப்படை அக்னிவீரின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  • படி 2: முகப்புப் பக்கத்தில், “Air Force Agniveer Application Form for Vayu Intake 1/2024.” என்பதைக் கிளிக் செய்யவும்.
  • படி 3: உங்கள் பயனர்பெயர்/மின்னஞ்சல் ஐடி மற்றும் கடவுச்சொல்லுடன் உள்நுழைந்து, விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும்.
  • படி 4: தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கவும்.
  • படி 5: எதிர்கால குறிப்புக்காக விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

தேர்வு செயல்முறை

எழுத்துத் தேர்வு: விண்ணப்பதாரர்கள் தங்கள் அறிவு மற்றும் திறன்களை மதிப்பிடுவதற்கு எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
உடல் தகுதித் தேர்வு: விண்ணப்பதாரர்கள் தேவையான உடற்தகுதித் தரங்களைப் பூர்த்தி செய்வதை உறுதிசெய்ய உடல் தகுதித் தேர்வை மேற்கொள்ள வேண்டும்.
மருத்துவப் பரிசோதனை: வேட்பாளர்களின் மருத்துவத் தகுதியை உறுதிசெய்ய முழுமையான மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும்.

விண்ணப்ப செயல்முறை நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கவனமாக வழிமுறைகளைப் பின்பற்றி, காலக்கெடுவிற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

TNPSC குரூப் 1 தேர்வுகள்.. வெளியான ஹால் டிக்கெட் - டவுன்லோட் செய்வது எப்படி?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios