ரூ. 1,40,000 வரை சம்பளம்.. இந்திய விமான நிலைய ஆணையத்தில் 342 காலியிடங்கள்.. முழு விவரம் இதோ..

இந்திய விமான நிலைய ஆணையத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட்ஸ், சீனியர் அசிஸ்டெண்ட்ஸ் மற்றும் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பதவிகளுக்கான மொத்தம் 342 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 

AAI Recruitment 2023 : Salary up to 1,40,000.. 342 Vacancies in Airports Authority of India.. Full Details Here..

இந்திய விமான நிலைய ஆணையத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.  இதன் மூலம் பல்வேறு துறைகளில் ஜூனியர் அசிஸ்டெண்ட்ஸ், சீனியர் அசிஸ்டெண்ட்ஸ் மற்றும் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பதவிகளுக்கான மொத்தம் 342 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 

இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) என்பது இந்திய அரசாங்கத்தின் பொதுத்துறை நிறுவனமாகும். தரையிலும் வான்வெளியிலும் சிவில் விமானப் போக்குவரத்துக்கான உள்கட்டமைப்பை உருவாக்குதல், மேம்படுத்துதல், பராமரித்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றுக்கு இந்த ஆணையமே பொறுப்பாகும். இந்த ஆட்சேர்ப்புக்கான விண்ணப்ப செயல்முறை ஆகஸ்ட் 5, 2023 முதல் தொடங்கும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் www.aai.aero என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

முக்கியமான தேதிகள்

ஆன்லைனில் விண்ணப்ப செயல்முறை  தொடங்கும் நாள் : 05.08.2023 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 04.09.2023

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வேறு எந்த வடிவில் வரும் விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான படிகள்

  • https://aai.aero/ என்ற இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும் 
  • " Careers" என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • “DIRECT RECRUITMENT FOR THE POST OF JUNIOR EXECUTIVE (AIR TRAFFIC CONTROL & OFFICIAL LANGUAGE), SENIOR ASSISTANT, MANAGER IN AAI UNDER ADVT. NO. 08/2022” என்ற விளம்பரத்தை கிளிக் செய்ய வேண்டும்.
  • வழிமுறைகளை கவனமாகப் படித்து, அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள "Online Portal” என்பதைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் உள்நுழைவுச் சான்றுகளை வழங்கவும் மற்றும் AAI ஆட்சேர்ப்பு 2023 விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
  • படிவத்தை சமர்ப்பித்த பிறகு, எதிர்கால குறிப்புக்காக AAI ஆட்சேர்ப்பு விண்ணப்பப் படிவத்தின் பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

விண்ணப்பக்கட்டணம்:

பொதுப்பிரிவு, EWS/OBC பிரிவினர் ரூ.1000 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். SC/ ST/ PWD பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

இந்திய விமான நிலைய ஆணையத்தின் பல்வேறு பதவிகளுக்கான நியமனம்,  ஆன்லைன் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம் : 

ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் :- ரூ.40000 - ரூ. 140000
மூத்த உதவியாளர் ரூ.36000- ரூ. 110000
இளநிலை உதவியாளர்- ரூ.31000 - ரூ. 92000

இந்த வேலைவாய்ப்பு பற்றிய கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்யவும்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios