டிகிரி இருந்தால் போதும்.. ரூ.1 லட்சம் சம்பளத்தில் இந்திய விமானநிலைய ஆணையத்தில் வேலை.. முழு விவரம் உள்ளே..

இந்திய விமான நிலைய ஆணையத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

AAI Junior Executive Recruitment 2023,  496 JE ATC vacancies check full details here Rya

இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) என்பது ஒரு பொதுத் துறை நிறுவனமாகும், தரை மற்றும் வான்வெளியில் சிவில் விமான உள்கட்டமைப்பை உருவாக்குதல், மேம்படுத்துதல், பராமரித்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவை இந்த ஆணையத்தின் முக்கிய பணிகளாகும். இந்த நிலையில் இந்திய விமான நிலைய ஆணையத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 496 ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் காலியிடங்கள் நிரப்பப்படும் என இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது, இந்த பணிகளுக்கு வரும் 30-ம் தேதி வரை (30.11.2023) விண்ணப்பிக்கலாம். 

முக்கிய தேதிகள்

இந்திய விமான நிலைய ஆணைய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியான நாள் : 14.10.2023
விண்ணப்ப செயல்முறை தொடங்கிய நாள் : 01.11.2023
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 30.11.2023

 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

வயது வரம்பு : இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு 30 நவம்பர் 2023 இன் படி 27 ஆண்டுகள் ஆகும்.

தகுதி: பிஎஸ்.சி இயற்பியல்/கணிதம் அல்லது பி.இ, பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக்கட்டணம் : ரூ.1000. எனினும் பெண்கள், எஸ்..சி, எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

சம்பளம் : ஆண்டுக்கு ரூ.13 லட்சம் கிடைக்கும் (ஒரு மாதத்திற்கு சராசரி ரூ.1,08,000)

தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபாரிப்பு, மருத்துவ பரிசோதனை ஆகிய அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலை.. டிப்ளமோ படித்திருந்தால் போதும்.. முழு விவரம் இதோ.

ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?

  • https://aai.aero/ என்ற இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்
  • Careers என்பதை கிளிக் செய்யவும்.
  • RECRUITMENT OF JUNIOR EXECUTIVES IN AIR TRAFFIC CONTROL IN AIRPORT AUTHORITY OF INDIA UNDER ADVERTISEMENT No. 05/2023” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  •  Registration Link என்பதை கிளிக் செய்யவும்.
  • வழிமுறைகளை கவனமாக படித்து, அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் போர்ட்டலை கிளிக் செய்யவும்.
  • AAI ஆட்சேர்ப்பு 2023 படிவத்தில் கேட்கப்பட்ட தனிப்பட்ட, கல்வி மற்றும் பிற விவரங்களை வழங்கவும்.
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் கையொப்பம் போன்ற தேவையான ஆவணங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் பதிவேற்றவும்.
  • தேவையான விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தி, இறுதியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கவும்.
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios