கவனத்திற்கு !! அரசு மருத்துமனைகளில் 889 காலி பணியிடங்கள்.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்..
889 மருந்தாளுனர் பணியிடங்களுக்கு இன்று முதல் வரும் 30ம் தேதி வரை http://mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
889 மருந்தாளுனர் பணியிடங்களுக்கு இன்று முதல் வரும் 30ம் தேதி வரை http://mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.அரசு மருத்துவ மனைகளில் காலியாக உள்ள 889 மருந்தாளுனர் பணியிடங்களுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள், டெக்னீஷியன்கள் என மொத்தம் 4,308 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியமான எம்.ஆர்.பி., வாயிலாக செப்டம்பர் மாதத்திற்குள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:ஆம்புலன்சுக்கு வழி விடாமல் சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ்... நடந்தது என்ன? மக்கள் விளக்கம்!!
தற்போது முதற்கட்டமாக காலியாக உள்ள 889 மருந்தாளுனர் பணியிடங்களுக்கான அறிவிப்பை எம்.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. அதன்படி, மருந்தாளுனர் பணியிடங்களுக்கு இன்று முதல் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் na.mrb.tn.gov.in என்ற அதிகாரப்பூவர் இணையதளத்தின் மூலம் ஆனலைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த பதவிகளுக்கான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே விண்ணப்பக் கட்டணம், கல்வித்தகுதி, வயது, ஊதியம் உள்ளிட்ட விபரங்களை இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க:தேர்வர்களே அலர்ட் !! குரூப் 2 முதல்நிலை தேர்வின் முடிவுகள் எப்போது வெளியீடு..? வெளியான முக்கிய தகவல்