8ம் வகுப்பு மட்டுமே போதும்.. மத்திய அரசில் 766 காலிப்பணியிடங்கள் - உடனே முந்துங்க !
குறைந்தபட்சம் 8 முடித்தவர்கள் முதல் டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் வரை விண்ணப்பம் செய்யலாம்.
உள்துறை அமைச்சகம் (Ministry Of Home Affairs, Intelligence Bureau (IB)) காலியாக உள்ள பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. மொத்தம் 11 வகையான பிரிவுகளில் 766 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. "லேடி வழியில் போக சொன்னா.. மோடி வழியில் போறாங்க" அதிமுகவை டாராக கிழித்த கி.வீரமணி
அதன்படி ACIO-I / Exe பிரிவில் 70 பணியிடம், ACIO-II / Exe பிரிவில் 350 பணியிடம், JIO-I / Exe பிரிவில் 50 பணியிடம் நிரப்பப்பட உள்ளது. மேலும் JIO-II / Exe பிரிவில் 100 பணியிடம், SA / Exe பிரிவில் 100, JIO-I /MT பிரிவில் 20 பணியிடம், JIO-II / MT பிரிவில் 35 பணியிடம், SA / MT பிரிவில் 20 பணியிடம், Halwai-cum-Cook 9 பணியிடம், Caretaker பிரிவில் 5 பணியிடம், JIO-II/Tech பிரிவில் 7 பணியிடம் என மொத்தம் 766 பணியிடங்கள் நிரப்ப்பபட உள்ளது.
குறைந்தபட்சம் 8 முடித்தவர்கள் முதல் டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் வரை விண்ணப்பம் செய்யலாம். எந்த பதவிகளுக்கு எந்த வகையான படிப்பு, அனுபவம் என்பதை mha.gov.in மூலம் தெரிந்து கொள்ளலாம். தகுதியான விண்ணப்பதாரர்கள் உள்துறை அமைச்சகத்தின் (MHA) அதிகாரப்பூர்வ இணையதளமான mha.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் செய்திகளுக்கு.. இடைக்கால பொதுச்செயலாளர் கனவில் எடப்பாடி.. மண்ணை அள்ளிப்போட்ட கேசிபி.. அச்சச்சோ !
விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான கடைசி தேதி வேலைவாய்ப்பு செய்திகளில் விளம்பரம் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 நாட்கள் ஆகும். இந்த ஆட்சேர்ப்பு செயல்முட்டை மூலம், நிறுவனத்தில் மொத்தம் 766 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. "தமிழகத்தில் இருந்து ஷிண்டே புறப்படுவார் !" அண்ணாமலை கிளப்பிய புது சர்ச்சை