TRB : 4,136 உதவி பேராசிரியர் காலி பணியிடங்கள்.. உண்மையா.? ஆசிரியர் தேர்வு வாரியம் சொன்ன விளக்கம்
அரசு கலை அறிவியல் கல்லூரிப் பேராசிரியர் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் நேரடியாக 163 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகள் என மொத்தம் 204 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இதுபற்றியான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு கல்லூரியில் உதவி பேராசிரியர் பணியிடங்கள் 4,136 காலியாக உள்ளன. இந்த உதவி பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க..TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை அதிரடியாக மாற்றம்.. எந்தெந்த தேர்வுகள் எப்போது நடக்கும்.? முழு விபரம்
இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், backing vaccancies 142, shortfall vaccancies 9, current vaccancies 3,982, சென்னை பிரசிடென்சி கல்லூரி 3 என மொத்தம் 4,136 பேராசிரியர் பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஊதியம் ரூ.57,000 முதல் 1,82,000 வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த பணியிடங்களுக்கு ஏப்ரல் 15 முதல் மே 14 வரை விண்ணப்பிக்க அவகாசம் எனவும் தேர்வு தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது. இந்த அறிவிப்பு தவறான தகவல் எனவும், இதுபோன்ற போலியான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க..ஒரு நாளைக்கு 50 செலுத்தினால் போதும்.. ரூ.35 லட்சம் ரிட்டன் கிடைக்கும் - அஞ்சலகத்தின் அருமையான திட்டம்