Asianet News TamilAsianet News Tamil

4 ஆயிரம் காலியிடங்கள்.. துணை பேராசிரியர் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. அமைச்சர் தகவல் !!

துணை பேராசிரியர் பணியிடங்கள் குறித்த அறிவிப்பை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார்.

4 thousand Assistant Professor posts to apply online said Minister K Ponmudi
Author
First Published Nov 8, 2022, 9:19 PM IST

சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில்,  5,408 உதவி பேராசிரியர்களுக்கான இடமாறுதல் தொடர்பான கலந்தாய்வை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், பொறியியல் கலந்தாய்வு 4-வது சுற்று வருகிற 14-ந்தேதி தான் நிறைவடைகிறது. இதுவரையில் 89,585 பேர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளார்கள்.

4 thousand Assistant Professor posts to apply online said Minister K Ponmudi

இதையும் படிங்க..கொட்டிக்கிடக்கும் அரசு வேலை.. 8ம் வகுப்பு படித்தாலே போதும்.. முழு தகவல்கள் இதோ

கடந்த ஆண்டு 80,383 பேர் சேர்ந்திருந்தார்கள். இந்த ஆண்டு 10 ஆயிரம் பேர் அதிகமாக சேர்ந்து இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், 4-வது சுற்றிலும் மாணவர்கள் சேர உள்ளார்கள் என்று கூறினார். காலியிடங்களுக்கு துணை கலந்தாய்வு நடைபெறும்.

இந்த ஆண்டு அதிக மாணவர்கள் சேர்க்கப்படுகிற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. கல்லூரி ஆசிரியர்கள் 4000 பேர் தேர்வு செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் இதற்கான பணி தொடங்கும். சிறப்பு விரிவுரையாளர் தேர்வு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.விண்ணப்பித்துவிட்டீர்களா.? ஜிப்மர் மருத்துவமனையில் 433 செவிலியர் அதிகாரி பணியிடங்கள் !!

கல்லூரி ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையான இடமாறுதல் கலந்தாய்வு, 5 ஆண்டுகளுக்குப் பிறகு  தற்போது ஆன்லைன் வழியாக இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 5,408 உதவி பேராசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்விற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

 4 ஆயிரம் காலியிடங்கள் உள்ளது. விரும்பும் இடங்களை பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். சீனியாரிட்டி அடிப்படையில் காலி இடங்களுக்கு மாறுதல் வழங்கப்படும் என்று கூறினார்.

இதையும் படிங்க.12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு HCL நிறுவனத்தில் வேலையுடன் ஓராண்டு பயிற்சி - அசத்தல் அறிவிப்பு !

Follow Us:
Download App:
  • android
  • ios