Asianet News TamilAsianet News Tamil

12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! ஹால் டிக்கெட் இன்று வெளியாகிறது! பதிவிறக்கம் செய்வது எப்படி?

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையிலும், 11ம் வகுப்பிற்கு மார்ச் 4-ம் தேதி முதல் 25-ம் தேதி வரையிலும், 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. 

12th public exam students hall ticket release today tvk
Author
First Published Feb 20, 2024, 9:43 AM IST

தமிழ்நாடு, புதுச்சேரியில் மார்ச் 1ம் தேதி தொடங்கவுள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று பிற்பகலில் வெளியிடப்படுகிறது. 

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையிலும், 11ம் வகுப்பிற்கு மார்ச் 4-ம் தேதி முதல் 25-ம் தேதி வரையிலும், 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. இவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படப்படுகிறது.

இதையும் படிங்க: டிப்ளமோ படித்திருந்தால் போதும்.. ரூ.20,000 சம்பளத்தில் தேசிய ஊரக நல வாழ்வு மையத்தில் வேலை.. 

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்: சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் இன்று பிற்பகல் முதல் www.dge.in.gov.in என்ற இணையதளத்தில் பிளஸ் 2 ஹால் டிக்கெட்டுக்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இதையும் படிங்க: இந்திய ரயில்வேயில் 9,000 காலியிடங்கள்.. சம்பளம் எவ்வளவு? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இதற்காக, online portal என்ற வாசகத்தினை click செய்து HIGHER SECONDARAY FIRST YEAR/ SECOND YEAR EXAM MARCH – 2024 என காணப்படும் பக்கத்தில், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID, Password-ஐ பயன்படுத்தி மாணவர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios