இந்தியாவில் சிறந்த கார் கடன் வட்டி விகிதங்களைப் பெறுவதற்கான வழிகாட்டி

கார் கடன் வட்டி விகிதங்கள் உங்கள் வாகனத்திற்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பதை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வழிகாட்டியில், கார் கடனில் சிறந்த டீலைப் பெறுவதற்கும் புதிய கார் கடன் ஒப்புதல் பெறும் செயல்முறையை ஒழுங்குபடுத்தவும் உதவும் குறிப்புகளைத் தெரிந்துகொள்ளலாம்.

Your Guide to Securing the Best Car Loan Interest Rates in India

ஒரு கார் வாங்குவது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டுவது மட்டுமல்ல; வரும் ஆண்டுகளில் உங்கள் பட்ஜெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பெரிய நிதிப் பொறுப்பும் கூடவே வரும். உங்கள் வாகனத்திற்கான நிதியைப் பெறும்போது கவனிக்க வேண்டிய மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, சிறந்த கார் கடன் வட்டி விகிதங்கள். நீங்கள் ஒரு நேர்த்தியான புதிய மாடலை வாங்குவதாக இருந்தாலும், நம்பகமான பயன்படுத்திய காரையோ வாங்க நினைத்தாலும் அதற்கு ஏற்ப சாதகமான கடன் விதிமுறைகளை எவ்வாறு பெறுவது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இது காலப்போக்கில் கணிசமான பணத்தை மிச்சப்படுத்தும். இந்த வழிகாட்டியில் கார் கடனில் சிறந்த டீலைப் பெறுவதற்கும் புதிய கார் கடன் ஒப்புதல் பெறும் செயல்முறையை ஒழுங்குபடுத்தவும் உதவும் குறிப்புகளைத் தெரிந்துகொள்ளலாம்.

கார் கடன் வட்டி விகிதங்கள் ஏன் முக்கியம்

கார் கடன் வட்டி விகிதங்கள்தான் உங்கள் வாகனத்திற்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பதை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறைந்த வட்டி விகிதம் இருந்தால் மாதாந்திர தவணைகள் மற்றும் மொத்த வட்டி இரண்டும் குறையும். அதே நேரத்தில், அதிக வட்டி விகிதம் இருந்தால், வாகனத்தின் ஒட்டுமொத்த விலையே அதிகரித்து, நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும்.

உதாரணமாக, ஐந்தாண்டு கால அவகாசத்துடன் ரூ.10,00,000 கார் கடன் பெறுவதாக வைத்துக்கொள்ளலாம். நீங்கள் 8% வட்டி விகிதத்துடன் கடனைப் பெற்றால், உங்களின் மாதாந்திரத் தவணைத் தொகை சுமார் 20,000 ரூபாய். வட்டி விகிதம் 12% என்றால், மாதாந்திர கட்டணம் சுமார் 22,000 ரூபாயாக உயரும். ஐந்து ஆண்டுகளில், கிட்டத்தட்ட ரூ.1,20,000 வித்தியாசம்! இதனால், நிதி சார்ந்த நல்ல முடிவை எடுப்பதற்கு சிறந்த கார் கடன் வட்டி விகிதங்களை எவ்வாறு பெறுவது என்று தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியம்.

கார் கடன் வட்டி விகிதங்களைப் பாதிக்கும் முக்கியக் காரணிகள்

நீங்கள் பெறக்கூடிய கார் கடன் வட்டி விகிதங்களை பல காரணிகள் பாதிக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்:

1. கிரெடிட் ஸ்கோர்

உங்கள் கிரெடிட் ஸ்கோர் என்பது உங்கள் கார் கடன் வட்டி விகிதங்களை நிர்ணயிக்கும் மிக முக்கியமான ஒன்றாகும். கடன் வழங்குபவர்கள் இந்த ஸ்கோரை அடிப்படையாகக் கொண்டு உங்கள் கடன் தகுதியை மதிப்பிடுகின்றனர்; பொதுவாக அதிக கிரெடிட் ஸ்கோர் இருப்பது குறைந்த வட்டி விகிதம் கிடைக்க வழிவகுக்கும். எடுத்துக்காட்டாக, 700 க்கு மேல் ஸ்கோர் வைத்திருக்கும் ஒருவர், குறைந்த ஸ்கோருடன் இருப்பவரைக் காட்டிலும் மிகவும் சாதகமான கடன் விதிமுறைகளைப் பெறலாம்.
கார் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன், உங்கள் கிரெடிட் ஸ்கோரைச் சரிபார்ப்பது நல்லது. உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டில் நிலுவையில் உள்ள கடன்கள் அல்லது பிழைகள் இருந்தால், அவற்றைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவும். கடன்களை முறையாகத் திரும்பச் செலுத்துதல், சரியான நேரத்தில் பணம் செலுத்துவதை உறுதிசெய்தல் போன்றவை உங்கள் ஸ்கோரை அதிகரிக்க உதவும். மேலும் கடன் வழங்குபவர்களுக்கு உங்கள் மீது நம்பகத்தன்மையை உண்டாக்கும்.

2. கடன் காலம்

உங்கள் கடனின் நீளம் அல்லது கால அளவு உங்கள் வட்டி விகிதத்தையும் பாதிக்கலாம். பொதுவாக, குறுகிய கால கடன்கள் குறைந்த வட்டி விகிதங்களைக் கொண்டிருக்கின்றன. அதே சமயம் நீண்ட கால கடன்கள் அதிக வட்டி விகிதங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் குறைந்த மாதாந்திரத் தவணையைப் பெறலாம். உங்கள் நிதி இலக்குகளுடன் ஒத்துப்போகும் சமநிலையுடன்  கடன் காலத்தைத் தேர்வு செய்வது மிகவும் முக்கியமானது.

குறைந்த மாதாந்திரத் தவணைகள் காரணமாக நீண்ட கடன் காலத்தைத் தேர்வு செய்வது கவர்ச்சிகரமானதாகத் தோன்றினாலும், கடன் தீர்வதற்குள் நீங்கள் கணிசமாக தொகையை அதிக வட்டியாகச் செலுத்தவேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கடன் காலத்தைத் தேர்ந்தெடுக்கும்போது உங்கள் பட்ஜெட் மற்றும் நீண்ட கால நிதி நோக்கங்களைக் கவனியுங்கள்.

3. கடன் தொகை மற்றும் முன்பணம் செலுத்துதல்

நீங்கள் கடன் வாங்கும் தொகை மற்றும் செலுத்தும் முன்பணம் ஆகியவை வட்டி விகிதத்தைப் பாதிக்கலாம். ஒரு பெரிய தொகையை முன்பணமாகச் செலுத்துவது கடன் தொகையைக் குறைக்கிறது. இது குறைந்த வட்டி விகிதத்திற்கு வழிவகுக்கும். மேலும், கணிசமான முன்பணத்தை வழங்குவது கடன் வழங்குபவர்களுக்கு நீங்கள் பொறுப்புள்ளவர் என்பதைக் காட்டுகிறது. இது உங்கள் கடன் விதிமுறைகளை மேம்படுத்தலாம்.

காரின் கொள்முதல் விலையில் குறைந்தது 20% முன்பணம் செலுத்த வேண்டும் என்பது அடிப்படை விதியாகக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் ₹15,00,000க்கு ஒரு காரை வாங்கினால், ரூ.3,00,000 முன்பணம் செலுத்தினால், சிறந்த வட்டி விகிதம் பெறுவதற்கான வாய்ப்புகள் கணிசமாக அதிகரிக்கும்.

4. சந்தை நிலைமைகள்

தற்போதைய சந்தை நிலைமைகள் கார் கடன் வட்டி விகிதங்களையும் பாதிக்கலாம். பணவீக்கம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைகள் போன்ற பொருளாதார காரணிகள் ஆகியவை கடன் வட்டி விகிதங்களைப் பாதிக்கலாம். சந்தைப் போக்குகளைக் கண்காணித்து வருவது, உங்கள் கடன் விண்ணப்பத்திற்கு சிறந்த வட்டி விகிதம் கிடைக்க உதவும்.

சிறந்த கார் கடன் வட்டி விகிதங்களைப் பெறுவதற்கான உதவிக்குறிப்புகள்

சிறந்த கார் கடன் வட்டி விகிதங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க, இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றலாம்:

1. உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்தவும்

முன்பு குறிப்பிட்டபடி, அதிக கிரெடிட் ஸ்கோர் குறைந்த வட்டி விகிதத்திற்கு வழிவகுக்கும். கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன், உங்கள் கிரெடிட்டை மேம்படுத்த செயல்திறமிக்க நடவடிக்கைகளை எடுக்கவும்:

* சரியான நேரத்தில் பில்களை செலுத்துங்கள்: தாமதமாக பணம் செலுத்துவது உங்கள் ஸ்கோரை எதிர்மறையாக பாதிக்கலாம்.
* நிலுவையில் உள்ள கடன்களைக் குறைத்தல்: கிரெடிட் கார்டு நிலுவைகளைக் குறைத்து கடன்களைச் செலுத்துவதில் கவனம் செலுத்தலாம்.
* உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டை சரிபார்க்கவும்: உங்கள் ஸ்கோரைப் பாதிக்கக்கூடிய ஏதேனும் பிழைகள் இருந்தால் அவற்றை உடனே சரிசெய்யவும்.

2. வட்டி விகிதங்களை ஒப்பீடுதல்

அனைத்து கடன் வழங்குபவர்களும் ஒரே மாதிரியான கார் கடன் வட்டி விகிதங்களை வழங்குவதில்லை. சிறந்த டீலைக் கண்டறிய, வங்கிகள், கடன் சங்கங்கள் மற்றும் ஆன்லைனில் கடன் வழங்குபவர்கள் உட்பட பல்வேறு ஆதாரங்களில் இருந்து வட்டி விகிதங்களை ஒப்பிடவும். கடன் விதிமுறைகள், கட்டணங்கள், இதர கட்டணங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்.
இந்தச் செயல்முறையை எளிதாக்க ஆன்லைன் ஒப்பீட்டு கருவிகளைப் பயன்படுத்தவும். சிறிது நேர ஆராய்ச்சி செய்து முடிவெடுப்பது சிறந்த வட்டி விகிதத்தைப் பெற உதவலாம்.

3. முன் அனுமதியைக் கருத்தில் கொள்ளுங்கள்

கார் கடனுக்கான முன் அனுமதி பெறுவது, வாகனம் வாங்கும்போது உங்கள் பேரம் பேசும் திறனை கணிசமாக அதிகரிக்கும். மேலும், நீங்கள் எவ்வளவு கடன் வாங்கலாம், எந்த வட்டி விகிதங்கள் கிடைக்கும் என்பவை பற்றிய தெளிவான பார்வையை வழங்கும். இது கார் வாங்கும் செயல்முறையை ஒழுங்குபடுத்துவது மட்டுமல்லாமல், டீலர்ஷிப்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது உங்கள் தரப்புக்கு வலுசேர்க்கும்.

கூடுதலாக, முன்-அனுமதி பெற்ற கடன் அதிக டீலர் நிதி விகிதங்களைத் தவிர்க்க உதவுகிறது. உங்கள் பட்ஜெட்டில் நீங்கள் உறுதியாக இருப்பதையும் உறுதிசெய்யும்.

4. வட்டி விகிதத்துக்கு பேரம்

கடன் வழங்குபவர்களுடன் பேரம் பேசத் தயங்க வேண்டாம். வேறொரு கடன் வழங்குநரிடம் சிறந்த விகிதம் கிடைப்பதாக இருந்தால், அதை உங்கள் விவாதங்களில் குறிப்பிடவும். பல கடன் வழங்குநர்கள் போட்டியாக சில கூடுதல் சலுகைகளைக்கூட வழங்கத் தயாராக உள்ளனர்.

பேச்சுவார்த்தைகளின்போது உங்கள் கடன் வரலாறு மற்றும் நிதி நிலைமை பற்றி விவாதிக்க தயாராக இருங்கள். நீங்கள் நன்கு விவரம் அறிந்தவர் என்பதை நிரூபிப்பது உங்கள் தரப்பை வலுப்படுத்தும்.

5. கூடுதல் கட்டணங்கள் குறித்து கவனமாக இருங்கள்

கார் கடன் பெறும்போது, உங்கள் ஒட்டுமொத்தச் செலவுகளைப் பாதிக்கக்கூடிய கூடுதல் கட்டணங்கள் குறித்து கவனம் செலுத்துங்கள். அதில் பின்வரும் கட்டணங்கள் அடங்கும்:
* செயலாக்கக் கட்டணம்
* முன்கூட்டியே தவணை செலுத்துவதற்கான அபராதங்கள்
* தாமதத்துக்கான செலுத்தும் கட்டணம்
இந்தக் கட்டணங்களைப் புரிந்துகொள்வது உங்கள் கடனைப் பற்றி மேலும் தெளிவான முடிவை எடுக்க உதவும்.

6. சந்தைப் போக்குகளைப் பற்றித் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்

சந்தை நிலவரங்களைக் கண்காணிப்பது கடனுக்கு விண்ணப்பிக்க சிறந்த நேரத்தைக் கண்டறிய உதவும். பொருளாதார காரணிகளின் அடிப்படையில் வட்டி விகிதங்கள் ஏற்ற இறக்கம் காணலாம். எனவே சந்தை குறித்த விழிப்புணர்வு உங்கள் முடிவெடுக்கும் திறனுக்கு வழிகாட்டியாக இருக்கும்.

நீங்கள் கார் கடன் வட்டி விகிதங்கள் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. உங்கள் வட்டி விகிதத்தைப் பாதிக்கும் காரணிகளைப் புரிந்துகொண்டு, செயலூக்கத்துடன் நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம், உங்கள் வாகனத்தை வாங்குவதற்கான ஒட்டுமொத்தச் செலவைக் கணிசமாகக் குறைக்கலாம். உங்கள் கிரெடிட் ஸ்கோரைச் சரிபாருங்கள். கடன் வழங்குபவர்களை ஒப்பிட்டுங்கள். உங்களுக்கு விருப்பமான கடன் காலத்தைக் கருத்தில் கொண்டு, சிறந்த வட்டி விகிதத்தைப் பெற நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள். இதன் மூலம் உங்கள் நிதி இலக்குகளுடன் ஒத்துப்போகும் கடனைப் பெற்று, புதிய காரை ஓட்டிச் செல்லத் தயாராகுங்கள்.

உங்கள் பயணத்தைத் தொடங்க தயாரா? அப்படியானால், கிரெடிட் ஸ்கோரை மதிப்பிடுவதில் இருந்து தொடங்குங்கள். பல்வேறு கடன் வழங்குபவர்களை ஆராய்வதன் மூலம் சிறந்த கார் கடன் வட்டி விகிதங்களைக் கண்டறியலாம். உங்கள் கனவு கார் அடையக்கூடிய தூரத்தில்தான் உள்ளது - நீங்கள் அதற்காக புத்திசாலித்தனமாக செலவிடுவதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios