Asianet News TamilAsianet News Tamil

புது அப்டேட்களுடன் மீண்டும் வெளியீட்டுக்கு தயாராகும் யெஸ்டி ரோட்கிங்?

யெஸ்டி ரோட்கிங் மோட்டார்சைக்கிள் 650சிசி என்ஜின் கொண்ட மாடலாக மீண்டும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Yezdi Roadking To Return As 650cc Royal Enfield Rival Report
Author
Tamil Nadu, First Published Jan 25, 2022, 1:30 PM IST

கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் யெஸ்டி பிராண்டை மறுசீரமைப்பு செய்து புது மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. முதற்கட்டமாக ரோட்ஸ்டர், ஸ்கிராம்ப்ளர் மற்றும் அட்வென்ச்சர் என மூன்று மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. இவற்றின் விலை ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும்  வகையில் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.

சந்தையில் ரி-எண்ட்ரிக்கு அறிமுகம் செய்யப்பட்ட மாடல்களின் பெயர்கள் எளிமையாகவே தேர்வு  செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் முன்பு யெஸ்டி பிராண்டில் அதிக பிரபலமாக விளங்கிய மோட்டார்சைக்கிள் பெயர்களில் புது மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு பிரபலமாக இருந்த மாடல்களில் ரோட்கிங் ஒன்று ஆகும். 

கடந்த அண்டு யெஸ்டி நிறுவனம் ரோட்கிங் பெயரை பயன்படுத்துவதற்கான உரிமம் கோரி பெயரை டிரேட்மார்க் செய்தது. இதுவரை இந்த பெயரில் யெஸ்டி மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்படவே இல்லை. எனினும், யெஸ்டி ரோட்கிங் பெயரில் புதிய மோட்டார்சைக்கிள் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படும் என  தகவல் வெளியாகி உள்ளது. இதே தகவலை கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் அனுபம் தரேஜா உறுதிப்படுத்தி இருக்கிறார்.

Yezdi Roadking To Return As 650cc Royal Enfield Rival Report

இந்த மோட்டார்சைக்கிள் வித்தியாசமான ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட இரருக்கிறது. இந்த மாடலிலும் முந்தைய யெஸ்டி மோட்டார்சைக்கிள்களில் உள்ளதை போன்று டூயல் கிராடில் சேசிஸ் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய யெஸ்டி மோட்டார்சைக்கிள்  ஃபிளாக்‌ஷிப் மோட்டார்சைக்கிள் ஆகும். இதில் எல்.இ.டி. ஹெட்லேம்ப், எல்.இ.டி. டெயில் லேம்ப், எல்.இ.டி. இண்டிகேட்டர், பலவித ரைடு  மோட்கள், முன்புறம் யு.எஸ்.டி. ஃபோர்க் வழங்கப்படுகிறது.

புதிய யெஸ்டி ரோட்கிங் மாடலில் அதிக திறன் கொண்ட என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பி.எஸ்.ஏ. அறிமுகம் செய்த கோல்டு ஸ்டார் மாடலில் 652சிசி, சிங்கில் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருந்தது. இதே என்ஜின் புதிய ரோட்கிங் மாடலிலும் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 45.6 பி.எஸ். பவர், 55 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios