Asianet News TamilAsianet News Tamil

650சிசி-யில் உருவாகும் யெஸ்டி ரோட்கிங் - எப்போ வெளியாகுது தெரியுமா?

யெஸ்டி நிறுவனத்தின் புதிய 650சிசி ரோட்கிங் மாடல் இந்திய அறிமுக விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Yezdi Roadking India launch soon to rival Royal Enfield Interceptor 650
Author
Tamil Nadu, First Published Jan 31, 2022, 12:24 PM IST

கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் சமீபத்தில் யெஸ்டி பிராண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. நீண்ட இடைவெளிக்கு பின் அறிமுகமான நிலையில், மூன்று மோட்டார்சைக்கிள்களை யெஸ்டி அறிமுகம் செய்தது. இந்த நிலையில், யெஸ்டி பிராண்டின் புது மோட்டார்சைக்கிள் மாடலின் வெளியீட்டு விவரங்கள் வெளியாகி உள்ளது. 

அதன்படி யெஸ்டி ரோட்கிங் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 80 மற்றும் 90-களில் பிரபல இருசக்கர வாகனங்களில் ஒன்றாக ரோட்ஸ்டர் மாடல் இருந்தது. ரி-எண்ட்ரியை தொடர்ந்து அறிமுகமாக இருக்கும் புதிய ரோட்ஸ்டர் மாடல் யெஸ்டி பிராண்டின் ஃபிளாக்‌ஷிப் மாடலாக இருக்கும் என தெரிகிறது. இது பி.எஸ்.ஏ. கோல்டு-ஸ்டார் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

Yezdi Roadking India launch soon to rival Royal Enfield Interceptor 650

புதிய ரோட்கிங் மாடலில் 652சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 45 பி.ஹெச்.பி. திறன், 55 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. புதிய யெஸ்டி ரோட்கிங் மாடலில் பல்வேறு அதிநவீன அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. 

மேலும் இதில் ஃபுல் எல்.இ.டி. லைட்டிங், டிஜிட்டல் கிளஸ்டர், கனெக்டிவிட்டி மற்றும் நேவிகேஷன் அம்சங்கள், டூயல் சேனல் ஏ.பி.எஸ். உள்ளிட்ட அம்சங்கள் யெஸ்டி ரோட்கிங் மாடலில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். புதிய யெஸ்டி ரோட்கிங் மாடலின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும் விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும். 

அறிமுகம் செய்யப்பட்டதும் புதிய யெஸ்டி ரோட்கிங் மாடல் இந்திய சந்தையில் ராயல் என்ஃபீல்டு இண்டர்செப்டார் 650 மற்றும் கவாசகி Z650RS போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். 

Follow Us:
Download App:
  • android
  • ios