gold rate today: ஆபரணத் தங்கம் விலை உயர்வா? சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாற்றமில்லாமல் தொடர்கிறது. சென்னையில் இன்று காலை தங்கம் விலை நேற்றை மாலை நீடித்த அதே விலையில் தொடர்கிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாற்றமில்லாமல் தொடர்கிறது. சென்னையில் இன்று காலை தங்கம் விலை நேற்றை மாலை நீடித்த அதே விலையில் தொடர்கிறது.
இதெல்லாம் மாறப்போகுது! ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கும் மாற்றங்கள் என்ன?
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,683க்கும், சவரண் ரூ.37,464க்கும் விற்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் நேற்று மாலை நீடித்த அதே விலையிலேயே தொடர்கிறது.
மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: பிடிஆர் அழைப்பை ஏற்றார் நிர்மலா சீதாராமன்
கடந்த 20 நாட்களாகவே தங்கத்தின் விலையில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. சவரணுக்கு ரூ.120 மாற்றமே மிகவும் அதிகபட்சமாக இருந்து வந்தது. சவரண் ரூ.38ஆயிரத்து 40 முதல் ரூ.38ஆயிரத்து 200 வரைதான் இருக்கிறது. இந்த விலைக்கு மேல் கடந்த ஒருவாரமாக விலை உயரவும் இல்லை, சரியவும் இல்லை.
அமெரிக்காவில் பணவீக்கத்தைக் குறைக்க வட்டிவீதத்தை பெடரல் வங்கி உயர்த்தும் பட்சத்தில் தங்கத்தின் விலை மேலும் சரியும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். அதனால்தான், தங்கத்தில் விலையில் பெரிதாக மாற்றம் இல்லாமல் இருக்கிறது.
nse co-location case: NSE-க்கு ரூ.7 கோடி அபராதம்: சித்ரா, சுப்ரமணியனுக்கு ரூ.5 கோடி: SEBI அதிரடி
ஆதலால், வரும் நாட்களில் அமெரிக்க பெடரல் வங்கியின் அறிவிப்பைப் பொறுத்து தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும், தங்கத்தில் முதலீடு செய்ய இது ஏற்ற தருணம் என்று தங்க நகை வியாபாரிகளும், சந்தை வல்லுநர்களும் தெரிவிக்கிறார்கள்.
வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 10 காசு குறைந்து ரூ.65.20க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.65,200 எனக் குறைந்துள்ளது.