Asianet News TamilAsianet News Tamil

Yamaha Fazzio 125cc : புது ஹைப்ரிட் ஸ்கூட்டர் அறிமுகம் செய்த யமஹா

யமஹா நிறுவனம் ஃபசியோ 125சிசி ஹைப்ரிட் ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. 

Yamaha Fazzio 125cc Hybrid scooter launched
Author
Tamil Nadu, First Published Jan 26, 2022, 11:27 AM IST

யமஹா நிறுவனம் இந்தோனேசிய சந்தையில் புதிதாக ஃபசியோ 125 ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு  வரும் ஃபசினோ 125 ஹைப்ரிட் மற்றும் ரே இசட்.ஆர். ஸ்கூட்டர்களில் வழங்கப்பட்டு இருக்கும் என்ஜினே புதிய ஃபசியோ 125 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய யமஹா ஃபசியோ மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ. 1.12 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அங்கு இந்த ஸ்கூட்டர் மொத்தம் ஆறு வித நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. யமஹா ஃபசியோ ஹைப்ரிட் மாடல் நியோ மற்றும் லக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் நியோ வேரியண்ட் நான்கு நிறங்களிலும் லக்ஸ் வேரியண்ட் இரண்டு நிறங்களிலும் கிடைக்கிறது.

Yamaha Fazzio 125cc Hybrid scooter launched

இந்த ஸ்கூட்டரில் 124.86சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் யமஹாவின் புளூ கோர் ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8.3 பி.ஹெச்.பி. திறன், 10.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் சி.வி.டி. டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்கூட்டரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் யமஹா வை கணெக்ட் செயலிக்கான வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் போன் சார்ஜிங் சாக்கெட், ஃபுல் எல்.இ.டி. ஹெட்லைட், கீலெஸ் லாக் / அன்லாக் சிஸ்டம்கள் உள்ளன. 

இத்துடன் யமஹா ஃபசியோ ஹைப்ரிட் ஸ்கூட்டரில் ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் திறன் கொண்டுள்ளது. இந்த மாடலின் இந்திய வெளியீடு இப்போதைக்கு நடைபெறாது என்றே கூறப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios