Asianet News TamilAsianet News Tamil

100 கி.மீ. ரேன்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான வார்டு விசார்டு இரண்டு புதிய ஹை-ஸ்பீடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்தது.

Wolf plus Gen Next Nanu plus electric scooters with 100 km range launched in India
Author
Tamil Nadu, First Published Feb 12, 2022, 12:53 PM IST

இந்தியாவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான வார்டு விசார்டு இரண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இரு ஸ்கூட்டர்களும் ஜாய் இ பைக் பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை வொல்ஃப் பிளஸ் மற்றும் ஜென் நெக்ஸ்ட் நானு பிளஸ் என அழைக்கப்படுகின்றன. இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் ஃபிளீட் சார்ந்த பயன்பாடுகளுக்கென டெல் கோ எனும் புது மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இரு ஸ்கூட்டர் மாடல்களிலும் ரி-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது பிரேக் லீவர் பயன்படுத்தும் போதெல்லாம் பேட்டரியை சார்ஜ் செய்யும். இத்துடன் BLDC ரக மோட்டார்கள், 3-ஸ்பீடு கண்ட்ரோலர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் NMC பேட்டரியை பயன்படுத்துகிறது. இதில் உள்ள 1500 வாட் மோட்டார் 20 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன.

Wolf plus Gen Next Nanu plus electric scooters with 100 km range launched in India

இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 55 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இரு ஸ்கூட்டர்களிலும் 60V35Ah பேட்டரி வழங்கப்பட்டு இருக்கின்றன. இவற்றில் போர்டபில் பேட்டரி வழங்கப்பட்டுள்ளன. இந்த பேட்டரிகளை நான்கு முதல் ஐந்து மணி நேரங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும். இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை செல்லும்.

அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்கூட்டர்களின் முன்புறம் டூயல் ஃபோர்க் ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் செட்டப், பின்புறம் மோனோ ஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு ஸ்கூட்டர்களிலும் 160mm கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளது. இத்துடன் கீலெஸ் ஸ்டார்ட் / ஸ்டாப் அம்சம் வழங்கப்பட்டு உள்ளது. கனெக்டிவிட்டிக்கு ஜாய் இ கனெக்ட் செயலியை டவுன்லோட் செய்து வொல்ஃப் பிளஸ் மற்றும் ஜென் நெக்ஸ்ட் நானு பிளஸ் மாடல்களின் சேவைகளை இயக்க முடியும். 

இந்த ஸ்கூட்டர்களில் இகோ, ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹைப்பர் என மூன்று விதமான டிரைவிங் மோட்கள் உள்ளன. இத்துடன் ரிவர்ஸ் மோட் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் GPS சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை கொண்டு ஸ்கூட்டர் எங்கே இருக்கிறது என்பதை கண்டறிய முடியும். 

Wolf plus Gen Next Nanu plus electric scooters with 100 km range launched in India

விலை விவரங்கள் 

புதிய வொல்ஃப் பிளஸ் மாடல் விலை ரூ. 1.10 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டர் மேட்  பிளாக், ஸ்டார்டஸ்ட் மற்றும் டீப் வைன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. ஜென் நெக்ஸ்ட் நானு பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 1.06 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் மிட்நைட் பிளாக் மற்றும் மேட் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

டெல் கோ மாடல் விலை ரூ. 1.14 லட்சம் ஆகும். இந்த மாடல் பிளாக் மற்றும் கிரே நிறங்களில் கிடைக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன. இந்த மாடல்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு வாரண்டி வழங்கப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios