ஒரு வாரத்தில் நாட்டின் ஜிடிபியில் 10ஆயிரம் கோடி டாலர் குறைந்துவிட்டது. ரிசர்வ் வங்கி ஏன் தலையிடவில்லை என்று பாஜக எம்.பி.யும் மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி விளாசியுள்ளார்.
ஒரு வாரத்தில் நாட்டின் ஜிடிபியில் 10 ஆயிரம் கோடி டாலர் குறைந்துவிட்டது. ரிசர்வ் வங்கி ஏன் தலையிடவில்லை என்று பாஜக எம்.பி.யும் மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி விளாசியுள்ளார்.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்த போரால், அந்நாட்டின் மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு சிக்கல் வந்துவிடுமோ என்ற பதற்றத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 14 ஆண்டுகளுக்குப்பின் பேரல் 140 டாலரை எட்டியது.

பங்குச்சந்தை பாதிப்பு
சர்வதேச சூழல் காரணமாகவும், புவிசார்அரசியல் சூழலாலும் இந்தியப் பங்குச்சந்தையில் கடந்த மாதம் முழுவதுமே பதற்றமான சூழல் காணப்பட்டது. இதனால் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் முதலீட்டாளர்கள் ரூ.29 லட்சம் கோடியை இழந்தனர். கச்சா எண்ணெய் விலை உயர்வால் நேற்று ஒரேநாளில் மட்டும் ரூ.6 லட்சம் கோடி இழப்பு முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
கச்சா எண்ணெய் விலை உயர்வாலும், பாதுகாப்பான முதலீடான தங்கத்தின் பக்கம் பணத்தை செலுத்தவும் முதலீட்டாளர்கள் விரும்புவதால் டாலரின் தேவை அதிகரிக்கிறது. டாலரின் தேவை அதிகரித்ததால், கடந்த சில நாட்களாக டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் சரிந்து வருகிறது. அன்னியச் செலாவணிச் சந்தையில் நேற்று டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 80 காசுகள் சரி்ந்து 77ரூபாயாக வீழ்ந்தது.

இந்தியாவின் பொருளாதாரம் கச்சா எண்ணெய் மற்றும் டாலரின் மதிப்பின் படியில் சிக்கியிருக்கிறது. பொதுவாக டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு மோசமாகச் சரியும்போது, ரிசர்வ் வங்கியிதலையிட்டு தன்னிடம் இருக்கும் டாலரை வெளியிட்டு ரூபாயின் மதிப்பை நிலைப்படுத்தும் ஆனால், ரிசர்வ் வங்கி இதுவரை ரூபாயின் மதிப்பை நிலைப்படுத்த முயற்சிஎடுக்கவி்ல்லை.
ஏன் தலையிடவில்லை
இதைச் சுட்டிக்காட்டி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் ரிசர்வ் வங்கியை விளாசியுள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில் கூறியிருப்பதாவது:

டாலரின் மதிப்பின் இந்திய ஜிடிபியின் மதிப்பு கடந்தஒரு வாரத்தில் 3 லட்சம் கோடி டாலரிலிருந்து 2.90 லட்சம் கோடி டாலராகக் குறைந்துவிட்டது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் ரூ.75லிருந்து ரூ.77 ஆகச் சரிந்துவிட்டது. இந்திய ரூபாயின் மதிப்பு 80 ரூபாயாக வீழ்ச்சி அடைந்தால், இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.80லட்சம் கோடி டாலராகக் குறைந்துவிடும்.

மத்திய அரசும், பிரதமர் மோடியும் 5 லட்சம் கோடி டாலர் கொண்ட பொருளாதாரமாக தேசத்தை மாற்றுவோம் எனக் கூறி வருகிறார்கள். இப்படிச் சென்றால், அந்த இலக்கு கடினமானதாக மாறிவிடும்.
இப்போது ரிசர்வ் வங்கியிடம் 64,000 கோடி அமெரிக்க டாலர் கையிருப்பு இருக்கிறது. இப்படி வலிமையாக இருந்தும், டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு சரியும் போது ரிசர்வ் வங்கி தலையிட்டு, அதை ஏன் தடுக்கவில்லை?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
