Asianet News TamilAsianet News Tamil

பாத்திரம் கழுவும் வேலை பார்த்து, இன்று கோடிகளில் சம்பாதிக்கும் தமிழர்.. யார் இந்த பிரேம் கணபதி?

பிரபல தோசா பிளாசாவின் நிறுவனர் பிரேம் கணபதியை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

Who is Prem Ganapathy founder of dosa plaza sucess story of the man now Earning In Crores
Author
First Published Aug 12, 2023, 11:26 AM IST

பெரிய பணக்கார குடும்பத்தில் பிறக்கவில்லை என்றாலும், நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் போராடி சொந்த முயற்சியில் முன்னேறி வாழ்க்கையில் சாதித்தவர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் ஒரு எளிய மற்றும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தான் தொடங்கிய தொழிலில் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய சாதனை நபர் குறித்து தான் பார்க்கப் போகிறோம். அவர் வீட்டை விட்டு வெளியேறும் போது வெறும் 200 ரூபாய் மட்டுமே அவரிடம் இருந்தது. வேறு எந்த ஆதரவும் இல்லை. ஆனால் அசைக்க முடியாத நம்பிக்கையும், மன உறுதியும் இருந்தது.

பாத்திரம் கழுபவராக இருந்து, மிகப்பெரிய கனவுகளுடன், தனக்கு எதிராக இருந்த முரண்பாடுகளை தகர்த்தெறிந்தார். இன்று, எல்லா எதிர்பார்ப்புகளுக்கும் மாறாக, பரந்து விரிந்த வணிகப் பேரரசின் தலைமையில் அவர் நிற்கிறார். ஆம். விதியை மாற்றி எழுதி, தடைகளை தகர்த்து தொழிலில் சாதித்த நபரின் எழுச்சியூட்டும் கதை இது. ஆம், தோசா பிளாசாவின் நிறுவனர் பிரேம் கணபதியை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

யார் இந்த பிரேம் கணபதி?

இந்தியவின் முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவரான பிரேம் கணபதி மற்றும் தோசா பிளாசா என்ற உணவகத்தை உருவாக்கியவர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், நியூசிலாந்து மற்றும் இந்தியா முழுவதும் தற்போது 72 கிளைகள் உள்ளன. இந்த தோசா பிளாசா உணவகத்தில் வாடிக்கையாளர்கள் 105 விதமான தோசை வகைகளில் இருந்து தேர்வு செய்யலாம். ஒரு சிறிய தமிழ்நாட்டு குக்கிராமத்தில் பிறந்த கணபதி, ஒரு சிறிய தொகையில் தனது நிறுவனத்தை தொடங்கினார்.

பிரேம் கணபதியின் ஆரம்ப வாழ்க்கை மற்றும் போராட்டங்கள்

பிரேம் கணபதி தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் கிராமத்தில் பிறந்தார். 10-ம் வகுப்பை முடித்தவுடன் பள்ளிப் படிப்பை விட்டுவிட்டு வேலை தேடி சென்னைக்கு பயணமானார். சென்னையில் பல வேலை செய்து தனது குடும்பத்தை பார்த்துக்கொள்ள முயன்றார். பின்னர் அவர் 1990 இல் மும்பைக்கு சென்றார். துரதிர்ஷ்டவசமாக, மும்பையில் தனது ஆரம்ப நாட்களில் பல சிரமங்களை எதிர்கொண்டார்.

அவர் உள்ளூர் மொழி தெரியததால் வேலை இல்லாமல் தவித்து வந்தார். ஒரு நாள் அவரை பார்த்த தமிழ்க் குடும்பம் அவரைப் பார்த்து அவருக்கு வேலை தேடி உதவி செய்தது. கடைசியில் ஒரு பேக்கரியில் பாத்திரங்களைக் கழுவும் வேலை பிரேம் கணபதிக்கு கிடைத்தது. எனினும் அதிக பணம் சம்பாதிக்க, பிரேம் கணபதி பல்வேறு பேக்கரிகள் மற்றும் உணவகங்களில் வேலை செய்யத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கொஞ்சம் பணத்தைச் சேமித்து, சொந்த நிறுவனத்தைத் தொடங்க முடிவு செய்தார்.

பிரேம் கணபதி 1000 ரூபாய் என்ற சிறிய முதலீட்டில் தோசை விற்கத் தொடங்கினார். 1997 ஆம் ஆண்டு, ஒரு கடையின் முகப்பு  பகுதியை குத்தகைக்கு எடுத்து பொதுமக்களுக்கு பலவிதமான தோசைகளை விற்கத் தொடங்கினார். ஆனால் தனது தொழிலில் தனித்துவமான ஒன்றை அவர் உருவாக்க விரும்பினார். 2003இல், கணபதி மும்பையின் வாஷி சுற்றுப்புறத்தில் உள்ள ஒரு மாலில் கடையை அமைத்தார். அத்துடன் அவர் முயற்சியை கைவிடவில்லை. தனது கனவுகளை நனவாக்க நிறைய முயற்சிகளை பிரேம் கணபதி மேற்கொண்டார், 

கணபதியின் தோசை வியாபாரத்தை மற்றவற்றிலிருந்து தனித்து நிற்க வைத்தது அவருடைய பலவிதமான தோசைகள். அவர் Schezwan  தோசை, பனீர் சில்லி தோசை, மற்றும் ஸ்பிரிங் ரோல் தோசை போன்ற தோசைகளை அறிமுகப்படுத்தினார். தற்போது இவரது உணவகங்கள் 105 வகையான தோசைகளை வழங்குகின்றன. 2005-l, தோசா பிளாலா இந்தியாவில் 7 வெவ்வேறு இடங்களில் விற்பனை நிலையங்களைக் கொண்டிருந்தது. 2008 ஆம் ஆண்டில், கணபதி சர்வதேச சந்தையில் நுழைந்து நியூசிலாந்தில் விற்பனை நிலையங்களைத் திறந்தார்.

2011 இல், அவர் தனது முதல் கடையை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாயில் திறந்தார். தற்போது, உணவக சங்கிலி இந்தியா, ஓமன், நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளில் 72 விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது. 

பிரேம் கணபதியின் நிகர மதிப்பு

தனது கடின உழைப்பு மற்றும் மன உறுதியின் மூலம் இப்போது பிரேம் கணபதி தனது ரூ.1000-ல் தொடங்கிய வியாபாரத்தை ரூ. 50 கோடிக்கு மேல் மாற்றியதோடு, தோசை மன்னனாகவும் புகழ் பெற்றார். அவர் முதலில் மும்பைக்கு சென்ற போது, பிரேம் கணபதியிடம் எதுவும் இல்லை. உள்ளூர் மக்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை, அவர் பணம் சம்பாதிக்க சிரமப்பட்டார்.. ஆனால் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் மன உறுதியுடன், அவர் தனது பிராண்டை நிறுவினார். பணத்தை மிச்சப்படுத்தவும், சொந்தமாக தொழில் தொடங்கவும் இரண்டு வருடங்கள் கடுமையாக உழைத்தார். கணபதியின் இந்த வெற்றிக்கதை நிச்சயம் பலருக்கும் உத்வேகமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Single Mother முதல் இந்தியாவின் பணக்கார பெண் வரை.. மீரா குல்கரினியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Follow Us:
Download App:
  • android
  • ios