whatsapp business: CASHe : நிதி நிறுவனமான கேஷ்-இ(CASH-e) உடன் சேர்ந்து வாட்ஸ்அப் நிறுவனம் பயனாளிகளுக்கு 30 வினாடிகளில் கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

நிதி நிறுவனமான கேஷ்-இ(CASH-e) உடன் சேர்ந்து வாட்ஸ்அப் நிறுவனம் பயனாளிகளுக்கு 30 வினாடிகளில் கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ்அப்பில் பிஸ்னஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த கடனுதவி திட்டத்தில் பயன் பெற முடியும். இந்தத்திட்டத்தின் கீழ் உரிய ஆவணங்கள், கேஒய்சி(KYC) விவரங்களைத் தாக்கல் செய்தால் வாடிக்கையாளர்களின் கிரெடிட் ஸ்கோருக்கு ஏற்றார்போல் 30 வினாடிகளில் கடனுதவி வழங்கப்டும்

இந்த திட்டத்தின் கடனுதவி பெற நினைக்கும் வாடிக்கையாளர்கள் எந்தவிதமான ஆவணங்களையும் வழங்க வேண்டியதில்லை, எந்தவிதமான விண்ணப்பத்தையும் நிரப்ப வேண்டியதில்லை. எந்த செயலியையும் பதவிறக்கம் செய்ய வேண்டியதும் இல்லை. 
எவ்வாறு கடன் பெறலாம்.

வாட்ஸ்அப் பிஸ்னஸ் கணக்கு வைத்திருப்பவோர் முதலில் தங்களின் வாட்ஸ்அப்பில் +91 80975 53191 எனும் செல்போன் எண்ணைப் சேமிக்க வேண்டும். அதன்பின் வாட்ஸ்அப் சாட்பாக்ஸில், HI என ஒரு செய்தி டைப் செய்ய வேண்டும். 
இந்த செய்தியை டைப் செய்தவுடன் வாட்ஸ்அப் பிஸ்னஸ் பயனாளிகள் முன்கூட்டியே ஒப்புதல் அளி்க்கப்பட்டகடன் பெறுவார்கள். 

யாருக்கு பயன் 

இந்த கடனுதவித் திட்டம் தானியங்கியாகச் செயல்படக்கூடியது என்பதால், 24 மணிநேரமும் செயல்படும். இந்த கடனுதவித் திட்டத்துக்கு யாரையும் அணுக வேண்டியதில்லை. மாத ஊதியம் பெறுவோர் மட்டுமே இந்தக் கடனுதவி திட்டத்தில் பயன் பெற முடியும்

எவ்வளவு கடனுதவி கிடைக்கும்

வாட்ஸ்அப் பிஸ்னஸ் கணக்கு வைத்திருப்போரின் கேஒய்சி விவரங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படும். அதன்பின் அந்த நபரின் கிரெடிட் ஸ்கோர் குறித்த விவரம் ஆய்வு செய்யப்பட்டு கடன் தொகை முடிவாகும். இது முற்றிலும் கணினி மூலம் நடக்கும் முறையாகும். பயனாளிகள் தங்களுக்கு வேண்டிய கடன் தொகையையும் பதிவிடலாம். ஆனால், பயனாளிகள் அளிக்கும் உண்மைத் தகவல் அடிப்படையில் கடன் தொகை முடிவாகும்.