மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட டிஜிட்டல் ருபி என்றால் என்றால் என்ன, எப்போது வரும், தனியார் கிரிப்டோகரன்சியிலிருந்து எவ்வாறு மாறுபட்டது என்பது குறித்து இந்த செய்தி அலசுகிறது
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட டிஜிட்டல் ருபி என்றால் என்றால் என்ன, எப்போது வரும், தனியார் கிரிப்டோகரன்சியிலிருந்து எவ்வாறு மாறுபட்டது என்பது குறித்து இந்த செய்தி அலசுகிறது
மத்திய பட்ஜெட்டை கடந்த 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி மூலம் (டிசிபிசி)டிஜிட்டல் கரன்சி கொண்டுவரப்படும். அதிகாரப்பூர்வமாக டிஜிட்டல் கரன்சி குறித்து மத்திய அரசு தெரிவித்திருப்பதால், அதுகுறித்த பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி(cbdc) பிளாக்செயின் தொழில்நுட்பம் மூலம், டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த அறிவிப்பின் மூலம் தனியார் கிரிப்டோகரன்சிகளான பிட்காயின், எதிரியம் அல்லது என்எப்டி ஆகியவற்றுக்கு முற்றிலும் எதிரானவர்கள் என்பதை மத்திய அரசு உணர்த்தியுள்ளது.
டிஜிட்டல் கரன்சி குறித்த 10 கேள்விகள், 10 பதில்களைப் பார்க்கலாம்
சிபிடிசி என்றால் என்ன?
மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி என்பதன் சுருக்கம்தான் சிபிடிசி. அரசால் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்படும் பியட் கரன்சி(fiat currency) போல் டிஜிட்டல் கரன்சியும் ஒன்று. ஆனால் வடிவம் வேறுபட்டது. மற்ற பொருட்களுக்கு நிகராக பரிமாற்றம் செய்யத்தக்கது. நாம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டைப்போல் அங்கீகரிக்கப்பட்ட வடிவம்தான் சிபிடிசி. ஆனால், டிஜிட்டல் வடிவத்தில் இருக்கும்.
டிஜிட்டல் ருபி எவ்வாறு செயல்படுகிறது
சிபிடிசி என்பது டிஜிட்டல் வடிவத்தில் இருக்கும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கரன்சியாகும். பரிமாற்றத்துக்கு மிகவும் எளிதானது. ரிசர்வ் வங்கி ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல் டிஜிட்டல் ருபி என்பது பாதுகாப்பானது, வளர்ச்சிக்குரியது, ரூபாய் நோட்டுக்கு மாற்றாக இருக்கும். பல்வேறு வடிவங்களில் வரும் டிஜிட்டல் கரன்சி, நிதிபரிமாற்றத்தின் கலவையாக இருக்கும்.
![]()
சிபிடிசி என்பது கிரிப்டோகரன்சியா, அதாவது பிட்காயின் மாதிரி இருக்குமா?
கிடையாது. சிபிடிசி என்பது தனியார் கிரிப்டோகரன்சி அல்ல. ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டு வெளியிட்டப்படும் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்ற டிஜிட்டல் கரன்சி. தனியார் கிரிப்டோகரன்சியான பிட்காயின், எதிரியத்தைவிட வேறுபட்டது. தனியார் மெய்நிகர் நாணயங்கள் பணத்தின் வரலாற்றுக் கருத்துடன் கணிசமான முரண்பாடுகளைக் கொண்டுள்ளன. இந்த கிரிப்டோ கரன்சிகளுக்கு நிலையான மதிப்பு என்பது இல்லை, யாரும் கட்டுப்படுத்துவது இல்லை. ஆனால், சிபிடிசிக்கு நிலையான மதிப்பு இருக்கும், அரசால் கட்டுப்படுத்தப்படும்
தனியார் கிரிப்டோ தங்கத்தைப் போல் சொத்துக்காகக் கருதப்படுவதற்கு ரிசர்வ் வங்கி பதில் என்ன?
தனியார் கிரிப்டோ கரன்சிகளுக்கு யாரும் உரிமை கோர முடியாது, அங்கீகாரம் அளிக்க முடியாது. தனிநபரின் சொத்துகாகவும்கருத முடியாது என்று ரிசர்வ் வங்கி ஏற்கெனவே தெரிவித்துள்ளது. தனியார் கிரிப்டோ கரன்சி நிச்சயாக அங்கீகரிக்கப்பட்ட கரன்சி அல்ல. யாரும் அதை வெளியிடவில்லை என்று கடந்த ஆண்டு ஜூலை 22ம் தேதி ரிசர்வ் வங்கி துணை கவர்கள் டி ரவி சங்கர் விளக்கமளித்துள்ளார். ஆதலால், எந்த தனிநபரும் கிரிப்டோ கரன்சியை வைத்திருப்பதை சொத்தாகக் கருத முடியாது, பரிமாற்றத்துக்கும் பயன்படுத்த முடியாது

சிபிடிசியை ரிசர்வ் வங்கி எப்படி பார்க்கிறது?
சிபிடிசி அறிமுகம் செய்யப்பட்டால், ரூபாய்நோட்டுகள் புழக்கம் குறையும், அச்சடிக்கும் செலவு மிச்சமாகும், பரிமாற்றச் செலவு குறையும், செட்டில்மென்ட் பற்றிய சிக்கல் முடிவுக்கு வரும். வலுவானது, திறன்மிக்கது, நம்பிக்கையானது, முறைப்படுத்தப்பட்ட கரன்சி, சட்டஅங்கீகாரம் பெற்ற கரன்சி என்பதால் மக்கள் நம்பிக்கையுடன் அணுகலாம் என்று ரிசர்வ் வங்கி துணைகவர்னர் சங்கர் தெரிவித்துள்ளார்.
சிடிபிசி-தனியார் கிரிப்டோ கரன்சிகளை ரிசர்வ் வங்கி எவ்வாறு கையாளும்?
ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் சங்கர் கூறுகையில் “ தனியார் கிரிப்டோ கரன்சிகளுக்கு மதிப்பு நிலையான மதிப்பில்லை, யாரும் கட்டுப்படுத்த முடியாது. எந்த பரிமாற்றத்துக்கும் உகந்தது அல்ல, சட்டஅங்கீகாரமும் உலக நாடுகள்அளிக்கவில்லை. ஆனால், சிபிடிசிக்கு சட்டஅங்கீகாரம் இருப்பதால் உலக நாடுகளில் ஏற்கப்படும், அங்கீகாரம் பெறும், பரிமாற்றத்தின்போது ஏற்பதில் எந்தச் சிக்கலும் வராது எனத் தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கி பார்வையில் சிபிடிசியைக் கையாள்வதில் உள்ள சிரமங்கள் என்ன?
ரிசர்வ் வங்கி துணை கவர்னர் சங்கர் கூறுகையில் “ சிபிடிசி கரன்சியை கையாள்வதிலும் சில சிக்கல்கள் உள்ளன. எந்த வங்கியாவது வாடிக்கையாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தால், வாடிக்கையாளர்களோ அல்லது முதலீட்டாளர்களோ உடனடியாக தங்கள் பணத்தை எடுத்துவிட முடியும். இது வங்கி நிலைத்தன்மையை பாதிக்கும். பணம் திரும்பப் பெறுதலைவிட, பணம் டெபாசிட் செய்வது வேகமாக இருக்கும். சிபிடிசி வந்துவிட்டால் எந்தநேரமும் பணத்தை வாடிக்கையாளர்கள் எடுப்பார்கள் என்பதால், வங்கி எப்போதுமே ரொக்கப்பணத்தை அதிகமாக வைத்திருக்க வேண்டியது வரலாம். வங்கிகளுக்கு கிடைக்கும் வட்டியின் அளவும் குறையக்கூடும்” எனத் தெரிவித்தார்
சிபிடிசி எப்போது அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கிதிட்டமிட்டுள்ளது?
மத்திய பட்ஜெட்டில் டிஜிட்டல் கரன்சி அறிவிப்பு வெளியாகிவிட்டதால், மத்திய அமைச்சரவை அனுமதி பெற்று, ரிசர்வ் வங்கியை பணியைத் தொடங்க உத்தரவிடும். பூர்வாங்கப் பணிகளை ஏற்கெனவே ரிசர்வ் வங்கி முடிந்துவிட்டதால், நிதியாண்டு பிறந்த சில மாதங்களில் ரிசர்வ் வங்கியால் அறிமுகமாகலாம்.
இந்தியாவில் தனியார் கிரிப்டோ கரன்சியின் எதிர்காலம் என்ன?
அதுபற்றி இதுவரை யாருக்கும் தெரியாது. ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு, வருமானவரித்துறை கண்காணிப்பு வந்துவிட்டதால் ஒழுங்குமுறைக்குள் வரக்கூடும். தனியார் கிரிப்டோவில் லாபம் பார்த்தவர்கள் அந்த முதலீட்டை திரும்பப்பெறக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. ஆனால், கிரிப்டோகரன்சிகளை ஒழுங்குபடுத்தும் மசோதாவை மத்திய அரசு தயாரித்து வருகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கலாவது குறித்து தெரியவில்லை. அரசின் உத்தரவு வரும்வரை, ரிசர்வ் வங்கி தனியார் கிரிப்டோக்களை கண்காணிக்கும், அரசின் உத்தரவுப்பின் அதிரடிமுடிவுகள் எடுக்கப்படலாம்.

கிரிப்டோ வரி 30%விதிக்கப்பட்டுள்ளதே அப்படியென்றால் என்ன?
தனியார் கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்து வருமானம் ஈட்டினால் 30 சதவீதம் வரிவிதிக்கப்படும், ஏற்கெனவே முதலீடு செய்திருந்தாலும், அதிலிருந்து வருமானம் கிடைத்தாலும் அதற்கு வரிவிதிக்கப்படும். வரிவிதிப்புக்கு உட்பட்டதால் தனியார் கிரிப்டோக்கள் சட்டப்பூர்வமானது என அர்த்தமில்லை. இந்த வாதங்களைத் தவிர்க்கவே சிபிடிசி விரைவில் வரும்.
