பிப்ரவரி 1ம் தேதி முதல் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 3 முக்கிய மாற்றங்களை மறந்துவிடாமல் நினைவில் வைத்துச் செல்ல வேண்டும்.
பிப்ரவரி 1ம் தேதி முதல் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 3 முக்கிய மாற்றங்களை மறந்துவிடாமல் நினைவில் வைத்துச் செல்ல வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் வங்கி, நிதிச்சேவையில் ஏதாவது புதுப்புது மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதிலும் ஏப்ரல் 1-ம் தேதி புதிய நிதியாண்டு பிறக்கும்போது, ஏராளமான மாற்றங்கள் நடைமுறைக்குவரும்.
ஆனால், வங்கிகள் அவ்வப்போது தங்களின் வசதிக்கு ஏற்பவும், வாடிக்கையாளர் சேவையை விரைவுப்படுப்படுத்தவும், பாதுகாப்பான பரிமாற்றத்துக்காகவும் சில மாற்றங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் 3 வங்கிகள் வாடிக்கையாளர்கள் நலனுக்காக மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.

எஸ்பிஐ வங்கி சலுகை
நாட்டிலேயே மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, பிப்ரவரி 1ம்தேதி முதல் ஐஎம்பிஎஸ் சேவையின் கீழ் செய்யப்படும் பரிமாற்ற அளவை அதிகரித்துள்ளது. எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இதற்கு முன் ஐஎம்பிஎஸ் முறை மூலம் ரூ.2 லட்சம் வரை மட்டுமே அனுப்ப முடியும். ஆனால், பிப்ரவரி 1-ம் தேதி முதல் ஐஎம்பிஎஸ் சேவை மூலம் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை பணம் அனுப்ப முடியும்.
அதுமட்டுமல்லாமல் டிஜிட்டல்முறையில் இணையதள வங்கிசேவை, யோனோ, மொபைல் பேங்கிங் ஆகியவை மூலம் அனுப்பப்படும் ரூ.5 லட்சம்வரை எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படாது.
ஆனால், வங்கிக்கு நேரடியாகச் சென்ரு ரூ.1000க்கு அதிகமாக ரூ.5 லட்சம் வரை அனுப்பும்போது, சேவைக்கட்டணமும், ஜிஎஸ்டிவரியும் சேர்த்து வசூலிக்கப்படும்.

பிஎன்பி வாடிக்கையாளர்கள் கவனமா இருங்க...!
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஏதேனும் பொருட்களை தவணைக்கு வாங்கி, அதற்கு ஒவ்வொரு மாதமும் இஎம்ஐ கட்டி வந்தால், பிப்ரவரி 1-ம்தேதி முதல் கவனமாக இருக்க வேண்டும்.
ஏனென்றால், இஎம்ஐ செலுத்தும்தேதி வரும்போது வங்கிக்கணக்கில் பணம் இ்ல்லாமல் இருந்து பேமெண்ட் தோல்வி அடைந்தாலோ, அல்லது வேறு எந்த பேமென்ட்டுக்கு பணம் எடுக்கும்போது பணம் இல்லாமல் இருந்தாலோ கணக்குவைத்திருக்கும் வாடிக்கையாளருக்கு ரூ.250 அபராதம் விதிக்கப்படும். இதற்கு முன் ரூ.100 மட்டும் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இது ரூ.250ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு மேம்பாடு
பிப்ரவரி 1ம் தேதி முதல் பேங்க் ஆஃப் பரோடா வங்கி காசோலைக்கு பணம் வழங்குதலில் கூடுதல் பாதுகாப்பு வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கி அறிவுரைப்படி, ரூ.10 லட்சத்துக்கு அதிகமான காசோலைக்கு யாரேனும் பணம் பெற வந்தால், அந்த காசோலை அளித்த வாடிக்கையாளருக்கு எஸ்எம்எஸ் அல்லது மொபைல் எண் மூலம் காசோலை எண், கணக்கு எண், காசோலை எண் ஆகியவற்றை விசாரித்துஉறுதி செய்தபின்புதான் பணம் வழங்கப்படும். ஒருவேளை காசோலை வழங்கியவர்கள் வங்கியின் செல்போன் அழைப்புக்கு பதில் அளிக்காவிட்டால், காசோலை திருப்பி அனுப்பப்படும் பணம் வழங்கப்படாது.

கிரெடிட் கார்டு கட்டணம் உயர்வு
பிப்ரவரி 1ம் தேதி முதல் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களின் கிரெடிட்கார்டு பரிமாற்றக்கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதன்படி ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் வாடிக்கையாளர்கள் 2.50 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும். அதுமட்டும் செலுத்தாமல் நிலுவையில் இருக்கும் பணத்துக்கு 2 சதவீதம் கட்டணமும், காசோலை அல்லது ஆட்டோ-டெபிட் பணம் இல்லாமல் திரும்பிவந்தாலோ 2% வரி விதிக்கப்படும், மேலும், ரூ.50 ஜிஎஸ்டி கட்டணமாகவும் வாடிக்கையாளர் கணக்கிலிருந்து எடுக்கப்படும்.
