அவசர தேவைக்கு நகை விற்றால் ரூ.1௦,௦௦௦ மட்டுமே கிடைக்கும்  ....மத்திய அரசு கெடுபிடி...

மத்திய அரசு தொடர்ந்து பல புது  புது சட்டத்தை கொண்டு வருகிறது அதன்படி, டிஜிட்டல் இந்தியாவாக மாற வேண்டும் என்பதற்காகவும் , ஊழலை  தடுப்பதற்காகவும், கருப்பு பண ஒழிப்பு  நடவடிக்கையாகவும் , பல்வேறு சட்ட  திருத்தங்களை  கொண்டு வந்துக் கொண்டே இருக்கிறது  மத்திய அரசு .

இந்நிலையில், அவசர  தேவைக்காக  தங்களிடம்  உள்ள  நகைகளை  அடகு  வைக்கும் சாமானிய  மக்கள் கூட பெருமளவில் பாதிக்கும் வகையில்  ஒரு சட்டத்தை  கொண்டு வந்தது மத்திய அரசு.

அதாவது 2௦ ஆயிரத்திற்கு மேல் நகை விற்றாலோ அல்லது  அடகு வைத்தாலோ, 2௦  ஆயிரம்  வரை  ரொக்கமாக  பெற முடியும் . மீதமுள்ள  பணத்தை  நம் வங்கி கணக்கில்  காசோலையாக பெறப்படும்  என்ற  விதி கூறப்பட்டது.

இதுவே  மக்களை  பெருமளவில்  பாதிக்க   செய்தது. இந்நிலையில் மீண்டும்  ஒரு வெடி குண்டு போட்டுள்ளது மத்திய அரசு .

அதாவது நகை வைத்து  2 ௦  ஆயிரத்திற்கு  மேல்  பணம்  பெறுவதற்கு , நகைகளை பிரித்து  வைத்து , 2 அல்லது 3  பில்  போட்டு, ஒரே  நபர்  பெயரில்   பெறுவதாகவும் தெரியவந்துள்ளது

இதனை  தடுக்கும் பொருட்டு , 2௦ ஆயிரமாக  நிர்ணயிக்கப்பட்ட தங்க  நகை கடன் , தற்போது  பாதிக்கு பாதியாக  குறைத்து  1௦ ஆயிரம்  மட்டுமே  ரொக்கமாக  பெற முடியும்  என்று  தெரிவிக்கப் பட்டுள்ளது. மீதமுள்ள  பணத்தை  வங்கி கணக்கில்  செலுத்த வேண்டுமாம்  நகை கடைக் காரர்கள் .

இதனால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் சாமானிய மக்களே, அவசர  தேவைக்கு தான் நகையை அடகு வைக்கிறார்கள். இதிலும் இது போன்ற கட்டுப்பாடுகள்  மத்திய அரசு கொண்டு வருவதால், பொதுமக்கள்  பெரிதும்  பாதிக்கப் படுகின்றனர்