வயநாடு நிலச்சரிவு துயரத்தை முன்னிட்டு, அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி புதன்கிழமை கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதி ரூ.5 கோடி நன்கொடை அளித்துள்ளார். 

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் குறைந்தது 205 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி புதன்கிழமை கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதி ரூ.5 கோடி நன்கொடை அளித்துள்ளார். 

முண்டகை மற்றும் சூரல்மலை பகுதிகளில் செவ்வாய்கிழமை இடம்பெற்ற நிலச்சரிவில் ஏராளமான மக்கள் காணாமல் போயிருக்கிறார்கள். 400க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன.

இந்நிலையில், இது குறித்து இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கௌதம் அதானி, "வயநாட்டில் ஏற்பட்ட துயரமான உயிரிழப்புக்கு ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை எண்ணி என் இதயம் வலிக்கிறது. இந்த இக்கட்டான நேரத்தில் அதானி குழுமம் கேரளாவுடன் உறுதுணையாக நிற்கிறது. நாங்கள் பணிவுடன் எங்கள் ஆதரவை வழங்குகிறோம். கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு 5 கோடி ரூபாய் வழங்குகிறோம்" எனக் கூறியுள்ளார்.

ஆகஸ்டு 1 முதல் புதிய FASTag விதிமுறைகள்! KYC அப்டேட் பண்ணலைன்னா சிக்கல் தான்!

Scroll to load tweet…

கனமழையால் செவ்வாய்க்கிழமை அதிகாலை வயநாட்டில் மிகப்பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ராணுவம், கடற்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) அடங்கிய மீட்புக் குழுக்கள் உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடித்து மீட்க அயராது உழைத்து வருகிறார்கள்.

புதன்கிழமை நிலவரப்படி, இராணுவம் சுமார் 1,000 பேரை மீட்டுள்ளது. விமானப்படை தேடல் மற்றும் மீட்பு முயற்சிகளில் உதவுவதற்காக வான்வழி ரோந்து நடத்திவருகிறது.

திருமணமான பெண் தன் பெயரை மாற்றிக்கொள்ள கணவரிடம் அனுமதி பெறணுமாம்! மத்திய அரசு விளக்கம்!!