ஆகஸ்டு 1 முதல் புதிய FASTag விதிமுறைகள்! KYC அப்டேட் பண்ணலைன்னா சிக்கல் தான்!
3-5 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட FASTag இருந்தால், அதில் KYC தகவலைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். ஐந்து வருடங்களுக்கும் மேலான FASTagஐ மாற்ற வேண்டும். வாகன உரிமையாளர்கள் தங்கள் FASTag வாங்கப்பட்ட தேதியைச் சரிபார்த்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
FASTag பயனர்களுக்கு ஆகஸ்ட் 1, 2024 முதல் புதிய விதிகள் நடைமுறைக்கு வருகிறது. இதற்காக இந்திய தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் (NPCI) மேம்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்துகிறது.
டோல்கேட்டுகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், சுங்கக் கட்டணம் செலுத்துவதை எளிதாக்குவதற்கும் FASTag இன்றியமையாததாக ஆகிவிட்டது. ஆகஸ்ட் 1 முதல், FASTag சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், 3-5 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட அனைத்து FASTagகளுக்கான KYC சரிபார்ப்பு செயல்முறைகளை அக்டோபர் 31 க்குள் முடிக்க வேண்டும்.
3-5 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட FASTag இருந்தால், அதில் KYC தகவலைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். ஐந்து வருடங்களுக்கும் மேலான FASTagஐ மாற்ற வேண்டும். வாகன உரிமையாளர்கள் தங்கள் FASTag வாங்கப்பட்ட தேதியைச் சரிபார்த்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழைய வாகன ஓட்டுநர்களுக்கு இந்த புதிய நெறிமுறைகள் மிகவும் முக்கியமானவை. ஆகஸ்ட் 1 முதல் அக்டோபர் 31 க்குள் FASTag சேவை வழங்குநர்கள் NPCI தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். மூன்று முதல் ஐந்து வருடங்கள் பழமையான FASTagகளுக்கான KYC ஐப் புதுப்பிக்க வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பழசாக இருந்தால் மாற்ற வேண்டும். இந்தக் காலக்கெடுவைத் தவறவிட்டால் FASTag சேவையில் சிக்கல் ஏற்படலாம்.
ஆகஸ்ட் மாதம் மொத்தம் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. எந்தெந்த நாட்கள் தெரியுமா?
ஆகஸ்ட் 1 முதல், அனைத்து ஃபாஸ்டேக்களும் வாகனத்தின் பதிவு எண் மற்றும் சேஸ் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும் என்றும் புதிய விதிகள் குறிப்பிடுகின்றன.
புதிய வாகன உரிமையாளர்கள் வாகனம் வாங்கிய 90 நாட்களுக்குள் தங்கள் பதிவு எண்ணை அப்டேட் செய்துவிட வேண்டும். FASTag வழங்குநர்கள் அனைத்து விவரங்களையும் சரிபார்த்து புதுப்பிக்க வேண்டும்.
மேலும், வாகனத்தை எளிதாக அடையாளம் காண வசதியாக வாகனத்தின் முன் மற்றும் பக்கத்தின் தெளிவான புகைப்படங்களையும் பதிவேற்ற வேண்டும். சுமூகமான தகவல் தொடர்புக்காக ஒவ்வொரு FASTagயும் மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டும்.
அனைத்து KYC தகவல்களையும் பூர்த்தி செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் 31, 2024 ஆகும். கடைசி நேர சிக்கல்களைத் தவிர்க்க இந்த அப்டேட்டுகளை முன்கூட்டியே செய்துகொள்ளவது நல்லது.
ஆன்லைனில் EB பில் கட்டுறீங்களா பாஸ்? இந்த தப்பை மட்டும் செஞ்சு வசமா மாட்டிக்காதீங்க!