2019 அல்லது அதற்கு பிறகு நீட் தேர்வு எழுதி தகுதி பெற்றவரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு குறைந்த கட்டணத்தில், அதுவும் வெளிநாட்டில் மருத்துவப்படிப்பு படிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

வாழ்க்கையை சீரும் சிறப்புடனும் வாழ, நல்ல வருமானம் கிடைக்கக்கூடிய பணியில் சேர வேண்டும் என்பதுதான் மாணவர்களின் கனவாக இருக்கிறது. மருத்துவம், பொறியியல், பட்டய கணக்காளர் ஆகியவை மாணவர்களின் கனவு படிப்புகளில் சில. மேல்நிலை கல்வியில் அறிவியல் பாடப்பிரிவுகளை தேர்வு செய்து படித்தவர்களின் பிரதான கனவாக மருத்துவ படிப்பு தான் உள்ளது. மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான தேசியளவில் பொது நுழைவுத்தேர்வாக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 

மருத்துவ படிப்பில் குறைந்த எண்ணிக்கையிலான இடங்களுக்கு, பல லட்சம் மாணவர்கள் போட்டி போடுகின்றனர். நாட்டின் புகழ்பெற்ற மருத்துவ கல்லூரிகள் சிலவற்றில் இடத்தை பிடிக்க மாணவர்கள் கடுமையாக போராடுகின்றனர். அதற்கு, நீட் தேர்வில் முதல் 4000-5000 ரேங்கிற்குள் வர வேண்டும். தென்னிந்தியாவில் நீட் தேர்வில் குறைந்த தேர்ச்சி பெற்றவர்களில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களும் உள்ளனர். ஆனால் நீட் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் அண்டை மாநிலங்கள் சற்று முன்னிலையில் இருக்கின்றன.

நீட் தேர்வு மற்றும் இந்தியாவில் மருத்துவ படிப்பில் குறைவான இடங்களே இருப்பது ஆகியவை மாணவர்களின் மருத்துவ கனவை தகர்க்கின்றன. இந்நிலையில், வேல்ஸ் கல்விக்குழுமம், மருத்துவ கனவுடன் இருக்கும் மாணவர்களின் கனவு தகர்ந்துவிடாமல், அவர்களுக்கு வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை உருவாக்கி கொடுக்கிறது. சென்னை, பெங்களூரு ஆகிய மாநகரங்களிலும் தெலுங்கானா மாநிலம் ஆகிய இடங்களில் உள்ள வேல்ஸ் கல்விக்குழுத்தின் கல்வி நிறுவனங்கள் சார்பில், சென்னை வளாகத்தில் ஒரு ப்ரீ-மெட் திட்டம் இதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் ஃபிலிப்பைன்ஸில் மருத்துவ படிப்பை படிக்க வழி செய்கிறது. ஃபிலிப்பைன்ஸில் உள்ள கல்வி நிறுவனங்கள் சிறந்த உட்கட்டமைப்பு, திறமையான ஆசிரியர்கள் மற்றும் தரமான மருத்துவ கல்வியை வழங்கு வசதிகளை பெற்றிருக்கின்றன.

இந்தியாவிலிருந்து ஏராளமான மாணவர்கள் வெளிநாடுகளில் மருத்துவம் படித்து வருகின்றனர். ஃபிலிப்பைன்ஸில் உள்ள கல்வி நிறுவனங்களால் இவையெதுவும் தமிழகத்தில் ஊக்குவிக்கப்படுவதில்லை. இங்கிருந்து செல்லும் பல மாணவர்கள் வெளிநாட்டில் சரியான உட்கட்டமைப்பு வசதி இல்லாத, தரம் குறைந்த கல்வி நிறுவனங்களில் படிக்க நேர்கிறது. இந்த நிலையில் தான், வேல்ஸ் கல்விகுழுமம் மூலம் மிகவும் வெளிப்படையாகவும், நேர்மையான முறையிலும் வெளிநாட்டில் உள்ள தரமான மருத்துவ கல்வி நிறுவனங்களில் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது. 

வேல்ஸ் கல்வி குழுமம் வழங்கும் இந்த அரிய வாய்ப்பை அறிந்து மாணவர்களும் பெற்றோர்களும் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். நம் நாட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளுடன் ஒப்பிடும்போது, வெளிநாட்டில் கல்வி கட்டணமும் குறைவு; பல்வேறு விதமான கலாச்சார மற்றும் பழக்கவழக்கங்களை கொண்ட மாணவர்களுடன் பழகும்போது, அவற்றையெல்லாம் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பாகவும் அமையும். எனவே சென்னையில் வேல்ஸ் கல்விக்குழுமத்தால் நடத்தப்படும் ப்ரீ-மெட் திட்டத்தில் சேரும் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பானதாக அமைவது உறுதி.

முதல்முறையாக ஒரு புகழ்பெற்ற கல்விக்குழுமம் இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதன்மூலம் ஃபிலிப்பைன்ஸ் சென்று, அங்கு மருத்துவம் படிப்பதுடன், அதன்பின்னர் எம்.டி உள்ளிட்ட மேற்படிப்புகளையும் அங்கேயே தொடர முடியும். 

குறைவான கட்டணம், பாதுகாப்பான சுற்றுச்சூழல் மற்றும் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய அமெரிக்க கல்விமுறை ஆகியவை வெளிநாட்டில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான வரப்பிரசாதமாக இருக்கும். ஃபிலிப்பைன்ஸின் உள்ள மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு உலக சுகாதார அமைப்பு மற்றும் ஃபிலிப்பைன்ஸ் சுகாதாரத்துறை, உயர்கல்வி ஆணையம் ஆகியவை அனுமதியளித்துள்ளன.

எனவே வேல்ஸ் கல்விக்குழுமத்தின் ப்ரீ-மெட் திட்டம் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு; மாணவர்களின் கனவை நிறைவேற்ற கண்டிப்பாக உதவும்.