தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். நடவடிக்கை எடுக்காவிட்டால் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

Bigg Boss Tamil ban demand : தமிழகத்தில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரும் வகையில் சபாநாயகரிடம் மனு கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் டிவி பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.,

 குறிப்பாக, நீயா நானா முதல் பல்வேறு நல்ல நிகழ்சிகளை நடத்தி வருகிறது. இதற்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இந்தநிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என, ஏற்கனவே ஜனநாயக ரீதியாக அறிக்கை கொடுத்துள்ளேன். தமிழக சட்டசபை கூட்டத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளேன்.

பிக்பாஸ் அரங்கத்திற்குள் நுழைவோம்

இதன் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் மிகப்பெரிய முற்றுகை போராட்டம் நடத்தப்படும், பிக்பாஸ் அரங்கத்திற்குள் நுழைவோம், விஜய் டிவியை முற்றுகையிடுவோம் என எச்சரிப்பதாக தெரிவித்தார். மாணவர்களையும், இளைய தலைமுறையை சீரழிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஸ்கிப்ரைட் என்றை பெயரில் தமிழ் சமூகம் எக்கேடு கெட்டாலும் பராவாயில்லை வருமானம் ஒன்று தான் என்ற பெயரில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்திவருகிறது. இந்த நிகழ்ச்சி குடும்பத்துடன் அமர்ந்து பக்க இயலாத வகையில் உள்ளது.

விஜய் டிவி முற்றுகையிடுவோம்

இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளேன். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவேன். கர்நாடாக மற்றும் கேரளாவில் இந்த நிகழ்ச்சி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற தமிழகத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேல்முருகன் தெரிவித்தார்.