Vedanta Sterlite Copper: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேதாந்தா திட்டம்
வேதாந்த குழுமம் மூடப்பட்ட ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை விற்பனை செய்யப் போவதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டது. இப்போது அந்த முடிவை வேதாந்தா நிறுவனம் கைவிட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.
வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்யும் முடிவை கைவிட்டு மீண்டும் உற்பத்தியை தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வேதாந்த குழுமம் மூடப்பட்ட ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை விற்பனை செய்யப் போவதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டது. இப்போது அந்த முடிவை வேதாந்தா நிறுவனம் கைவிட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி மறுபடியும் ஆலையில் உறபத்தியைத் தொடங்க ஆயத்தமாகி வருவதாகச் சொல்லப்படுகிறது. நாட்டில் தாமிர இறக்குமதி அதிகரித்து வருகிறது என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட இயலாது என்று வேதாந்தா நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.
இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு வரும் பிப்ரவரி 21ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
வேதாந்த குழுமத்தின் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்குச் சொந்தமான தாமிர உற்பத்தி ஆலை தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டுவந்தது. இந்த ஆலையால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரிப்பதாகவும் அப்பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
2016ஆம் ஆண்டு முதல் இந்த ஆலைக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்றது. 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடைபெற்ற பேரணியின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நாடு முழுவதும் பேசுபொருளாதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசுக்கும் நெருக்கடி ஏற்பட்டது. அதன் விளைவாக 2018ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
Union Budget 2023: மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழர்கள் யார் யார்?