ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது 6-வது ஆண்டுவிழாவையொடடி வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளையும், திட்டங்களையும் பரிசுகளையும் அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது 6-வது ஆண்டுவிழாவையொடடி வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளையும், திட்டங்களையும் பரிசுகளையும் அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக ரூ.2,999 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 

budget 2023-24: நிதி அமைச்சகம் சுறுசுறுப்பு ! 2023-24ம் ஆண்டு பட்ஜெட் தயாரிப்பு பணிகள் அக்டோபரில் தொடக்கம்

இது தொடர்பாக கடந்த 5ம் தேதி ட்விட்டரில் ஜியை நிறுவனம் பதிவிட்ட செய்தியில் “6-வது ஆண்டில் ஜியோ நிறுவனம் அடியெடுத்து வைக்கிறது, வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸூடன் இணைந்திருங்கள். 6வது ஆண்டில் 6 பெரிய சலுகைகளை ஜியோ வழங்குகிறது. உடனே ரூ.2,999 பிளானிற்கு ரீசார்ஜ் செய்யுங்கள்” எனத் தெரிவித்துள்ளது.

ரூ.2,999 ரீசார்ஜ் பிளான் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது. இருப்பினும்கூடுதலாக 6 பலன்களை வழங்குகிறது.

reat seat belt:காரில் சீட் பெல்ட் அலாரத்தை நிறுத்தும் பொருளை விற்காதீர்கள்: அமேசானுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

1. கூடுதலாக 75 ஜிகாபைட்ஸ் அதிவேக டேட்டா

2. Ixigo பயன்படுத்தும்போது ரூ.750 தள்ளுபடி

3. ரூ.750க்கு நெட்மெட்ஸ் கூப்பன் 

4. ப்ரோ பேக்கில் 6 மாதங்களுக்கு 50% தள்ளுபடி

5. ரிலையன்ஸ் டிஜிட்டல் ஷோரூமில் வாங்கும் பொருட்களுக்கு ரூ.500 தள்ளுபடி

6. ரூ.2,990க்கு ஏஜியோவில் பொருட்கள் வாங்கும்போது, ரூ.750 தள்ளுபடி

இந்த சலுகைகள் குறைந்த காலத்துக்குதான் விரைவில் முடிந்துவிடும். ஜியோ இணையதளம் மற்றும் ஷோரூம்களிலும் இந்த ஆஃபர் கிடைக்கும். 

seat belt: காரின் பின்சீட்டில் அமர்பவருக்கும் சீட் பெல்ட் கட்டாயம்! : மத்திய அரசு விரைவில் அறிவிப்பு

புதிய ரீசார்ஜ் திட்டம் என்ன

ஜியோ நிறுவனம், ரூ.2,999 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி தினசரி 2.5 ஜிபி டேட்டா, அளவில்லா அழைப்புகள், தினசரி 100எஸ்எம்எஸ், டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஆண்டு இலவச சந்தா, இந்த திட்டம் ஓர் ஆண்டுக்கு இருக்கும். 

இதேபோன்ற திட்டத்தை ஆகஸ்ட் 15ம்தேதி 75 வது சுதந்திரத்தினத்தன்று ரிலையன்ஸ் ஜியோஅறிமுகம் செய்தது. இந்த திட்டத்தை தற்போது நீட்டித்துள்ளது. இந்த பிளானில் சேர விரும்புவோர் மொபைல் மூலம் ரீசார்ஜ் செய்யலாம், ஆன்லைன் மூலம் ஜியோ இணையதளத்தில் ரீசார்ஜ் செய்யலாம், மைஜியோ ஆப் மூலம் ரீசார்ஜ் செய்யலாம். 

ஊசலாட்டத்தில் தங்கம் விலை! கணிக்க முடியாமல் நகைப்பிரியர்கள் தவிப்பு: இன்றைய நிலவரம் என்ன?

இந்த ரீசார்ஜ் மூலம் கிடைக்கும் கூப்பன்களை மைஜியோ ஆப்பில் உள்ள உங்களின் தனிப்பட்ட கணக்கில் சேமித்துக்கொள்ளலாம். அந்த சலுகைத் திட்டம் முடிவதற்கு கூப்பன்களை பயன்படுத்தலாம்.