US fed rate hike: US fed meeting: 28 ஆண்டுகளில் முதல்முறை: அமெரி்க்க பெடரல் வங்கி 0.75% வட்டியை உயர்த்தியது

fed rate hike: fed meeting:  us federal reserve news :அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாதவகையில் பணவீக்கம் அதிகரித்துள்ளதையடுத்து, அதைக் கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை 75 புள்ளிகள் நேற்று உயர்த்தியுள்ளது.

us federal reserve news : Fed hikes rates by 75 bps, biggest jump since 1994, flags slowing economy

fed rate hike: fed meeting: அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாதவகையில் பணவீக்கம் அதிகரித்துள்ளதையடுத்து, அதைக் கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை 75 புள்ளிகள் நேற்று உயர்த்தியுள்ளது.

கடந்த 1994ம் ஆண்டுக்குப்பின் அமெரி்க்காவில் பெடரல் ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை இந்த அளவு உயர்த்தியுள்ளது இதுதான் முதல்முறையாகும். 

us federal reserve news : Fed hikes rates by 75 bps, biggest jump since 1994, flags slowing economy

40 ஆண்டுகளில் இல்லாத பணவீகக்ம்

அமெரிக்காவில் வேலையின்மை அதிகரித்து வருகிறது, பொருளாதார வளர்ச்சி குறைந்து வருகிறது, பணவீக்கம் உயர்ந்து வருவதைக் கருத்தில்கொண்டு அடுத்த 3 காலாண்டுகளுக்கு வட்டிவீதம் உயரும் என்று பெடரல் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் 40 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கம் அதிகரித்துள்ளதால், விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.

எச்சரிக்கை

2008ம் ஆண்டு பொருளாதார மந்தநிலைக்கு அமெரிக்கா மீண்டும் தள்ளப்படலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்தனர். இதையடுத்து, கடந்த இரு மாதங்களுக்கு முன் கடனுக்கான வட்டியை பெடரல் வங்கி 0.5சதவீதம் உயர்த்தியது. ஆனால், அவ்வாறு உயர்த்தியும் மே மாதத்தில் அமெரிக்க பணவீக்கம் 8 சதவீதத்துக்கும் மேல்உயர்ந்தது.

பெடரல் ஆலோசனைக் கூட்டம்

இதையடுத்து, அமெரி்க்க பெடரல் ரிசர்வ் வங்கியின் 2 நாட்கள் ஆலோசனைக் கூட்டம் பெடரல் ரிசர்வ் வங்கி தலைவர் ஜெரோம் பாவல் தலைமையில் நடந்தது. அமெரிக்காவின் பல்வேறு வங்கிகளின் தலைவர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தின் முடிவில், அமெரிக்காவில் நிலவும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் கடனுக்கான வட்டியை 0.75 சதவீதம் உயர்த்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் பணவீக்கத்தை 2 சதவீதம் அளவுக்கு கொண்டுவரும் வகையில் அடுத்த 3 காலாண்டுகளுக்கு வட்டியை ஒரு சதவீதம் உயர்த்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

us federal reserve news : Fed hikes rates by 75 bps, biggest jump since 1994, flags slowing economy

மேலும் வட்டி உயரும்

அதில் குறிப்பாக பெடரல் வங்கி வெளியிட்ட அறிக்கையில் “ நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த பணவீக்கத்தின் எதிரொலி பொருட்களின் விலையிலும், எரிபொருட்களின் விலையிலும் இருக்கிறது.

இதனால் பொருட்களுக்கான தேவையும், சப்ளையும் சமநிலையற்ற தன்மைக்கு செல்கின்றன. இது பொருளாதாரத்துக்கு பெரும் அழுத்தத்தை அளிக்கிறது. நாட்டில் பணவீக்கத்தை 2 சதவீதம் அளவுக்கு கொண்டுவர பெடரல் ரிசர்வ் இலக்கு வைத்துள்ளது. ஆதலால் இந்த ஆண்டுக்குள் 1.75 சதவீதம் வட்டி உயர்வு இருக்கும்.

வேலையின்மை அதிகரிக்கும்

இதன்படி இந்த ஆண்டு இறுதிக்குள் வட்டியை 3.4 சதவீதம் உயர்த்துவோம், 2023ம் ஆண்டுக்குள் வட்டிவீதம் 3.8சதவீதமாக அதிகரிக்கும். கடுமையான நிதிக்கொள்கை முடிவுகள் பொருளதார வளர்ச்சியின் நலன் கருதி எடுக்கப்படும். பொருளாதார வளர்ச்சி 1.7 சதவீதம் என்ற வீதத்திலும், வேலையின்மை வீதம 3.7 சதவீதமாகவும் இந்த ஆண்டுக்குள் அதிகரிக்கும். இது 2024ம் ஆண்டுக்குள் 4.1 சதவீதமாக உயரும்.

us federal reserve news : Fed hikes rates by 75 bps, biggest jump since 1994, flags slowing economy

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி, வேலையின்மையைக் குறைக்கவே பெடரல் ரிசர்வ் வங்கி நடவடி்கை எடுத்துவருகிறது. 2024ம் ஆண்டில் வேலையின்மை 4.1 சதவீதமாக உயரும் என்பதுஎச்சரிக்கை விடுக்கக்கூடியது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தியச் சந்தையில் பாதிப்பா

அமெரிக்க பெடரல் வங்கி வட்டியை உயர்த்தப் போகிறது என்ற செய்தியைக் கேட்டபோதே, அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று முதலீட்டை வெளியே எடுப்பது அதிகரி்த்து வந்தது. 2022ம் ஆண்டில் மட்டும் ரூ.1.81 லட்சம் கோடிக்கு அந்நிய முதலீடு வெளியேறியுள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் ரூ.14 ஆயிரம் கோடி வெளியேறியுள்ளது.

இந்நிலையில் பெடரல் வங்கி வட்டிவீதத்தால் இந்தியப் பங்குச்சந்தையில் காலையிலேயே கடுமையான சரிவை எதிர்கொள்ளலாம், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பும் சரியலாம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios