உங்கள் காரின் கதவுகளை திறந்து சுதந்திர பறவையாக பயணங்களை மேற்கொண்டு எவ்வளவு காலம் ஆகிறது? இந்த அறிக்கை உங்களை பெருமூச்சுவிடவைத்தால், “Unlock with Mercedes-Benz” என்ற இந்த புதிய பிரச்சாரம் உங்கள் ஆர்வத்தை தூண்டும். கொரோனா பொதுமுடக்கம் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டு, தற்போதைய 4ம் கட்ட தளர்வில் பெரும்பாலும் அனைத்துவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திற்குள்ளும், மாநிலங்களுக்கு இடையேயும் பயணிப்பதற்கு எந்த தடையும் இல்லை. சில மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாவுக்கே மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த லாக்டவுன் காலம், “கார்பே டைம்”(எதிர்காலத்தை பற்றி சிந்திக்காமல் நிகழ்காலத்தை முழுமையாக பயன்படுத்துவது) என்பதற்கான உண்மையான அர்த்தத்தை அனைவருக்கும் புரியவைத்தது. இந்தியாவின் மிகப்பெரிய சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ், இந்திய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து புதிய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. ”மெர்சிடிஸ் பென்ஸ் உடனான அன்லாக்கின் புதிய பயணம்” என்ற பிரச்சாரத்தை, வாடிக்கையாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அன்லாக்கில் புதிய பயணங்களை மேற்கொள்ளும் வகையிலும், மெர்சிடிஸ் பென்ஸின் புதிய காரின் மூலம் நினைவுகளை மறு உருவாக்கம் செய்யும் விதமாகவும் இந்த பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸின் இந்த பிரச்சாரம் குறித்து பேசியுள்ள அந்நிறுவனத்தின் இந்தியாவிற்கான நிர்வாக இயக்குநர் மார்டின் ஸ்வென்க், மெர்சிடிஸ் பென்ஸ்-ன் வாடிக்கையாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும், எங்கள் வாடிக்கையாளர்களின் கனவுகளையும் ஆசைகளையும் விருப்பங்களையும் அன்லாக் செய்வதற்கான ஒரு முன்னெடுப்பாகத்தான் “Unlock with Mercedes-Benz” என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. மெர்சிடிஸில் மீண்டும் எங்கள் வாடிக்கையாளர்கள் புதிய மற்றும் சாகச பயணங்களை மேற்கொள்ளுவதை உறுதி செய்வதற்கான பிரச்சாரம் தான் இது. மெர்சிடிஸ் பென்ஸ் வாடிக்கையாளர்களுக்கு அவர்களது ஆசைகள் மற்றும் கனவுகளை அன்லாக் செய்யும் விதமாக பொருளாதார ரீதியான சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

மெர்சிடிஸ் பென்ஸ் கார் வாங்கவேண்டும் என்பது பலரது கனவு. அப்படி கனவு காண்பவர்களின் கனவை நனவாக்கும் விதமாக அருமையான சலுகையை மெர்சிடிஸ் பென்ஸ் வழங்குகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் கார் வைத்திருப்பது என்பது சமூகத்தில் அந்தஸ்து மற்றும் ஆடம்பரத்தை பறைசாற்றும் விஷயம். எனவே சொகுசு கார் வாங்க விரும்புவர்களுக்கான அருமையான வாய்ப்பு இந்த விழாக்காலம். வியப்பளிக்கக்கூடிய சிறப்பம்சங்களை கொண்ட சொகுசு காரை வாங்கி நீங்கள் உங்கள் வீட்டில் நிறுத்த இதுவே சரியான தருணம்.

”Unlock with Mercedes-Benz” திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் பயன்பெறலாம்.
C-Class: மாத தவணை ரூ.39,999 முதல் | வட்டி விகிதம் - 7.99% | 3 ஆண்டுகளில் புதிய ஸ்டார் | முதல் ஆண்டுக்கான இன்சூரன்ஸ்
E-Class: மாத தவணை ரூ.49,999 முதல் | வட்டி விகிதம் - 7.99% | 3 ஆண்டுகளில் புதிய ஸ்டார் | முதல் ஆண்டுக்கான இன்சூரன்ஸ்
GLC: மாத தவணை ரூ.44,444 முதல் | வட்டி விகிதம் - 7.99% | 3 ஆண்டுகளில் புதிய ஸ்டார் | முதல் ஆண்டுக்கான இன்சூரன்ஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் கார்களின் சிறப்பம்சங்கள்:

சொகுசு: கார் வாங்குபவர்களின் முதல் எதிர்பார்ப்பு சொகுசாக இருக்க வேண்டும் என்பதுதான். மேம்பட்ட, உயர்தர வடிவமைப்புகளுக்கு பெயர்போன மெர்சிடிஸ் பென்ஸ், ஓட்டுநர் மற்றும் பயணிப்பவர்களுக்கு உச்சபட்ச சொகுசை வழங்குகிறது.

புதுமை மற்றும் தொழில்நுட்பம்: MBUX பார்க்கிங் வாய்ஸ் டெக்னாலஜி, மெர்சிடிஸ் மீ அப்ளிகேஷன் என டெக்னாலஜி மற்றும் புதுமையில் எப்போதுமே மெர்சிடிஸ் பென்ஸ் முன்னணியில் உள்ளது. 

தேர்வு: செடான் ரகம் முதல் எஸ்.யு.வி ரகம் வரை பல விதமான கார்கள் உள்ளன. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான  மற்றும் உகந்த காரை தங்கள் வசதிக்கேற்ப தேர்வு செய்துகொள்ளலாம்.

பாதுகாப்பு: உச்சபட்ச பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டு, மிகவும் பாதுகாப்பான கார்களைத்தான் மெர்சிடிஸ் பென்ஸ் சந்தைப்படுத்துகிறது. மேலும் ஏபிஎஸ், ஏடிஎஸ்+ உடன் கூடிய ஏர்மேட்டிக் சஸ்பென்ஸன்ஸ் என முழு பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது மெர்சிடிஸ் பென்ஸ்.

பிரேக்டவுன் மேலாண்மை: பயணத்தின் இடையே காரில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், ஓட்டுநரின் தலைக்கு மேல் இருக்கும் பட்டனை அழுத்தினால் போதும், உடனே சாலையோர உதவி ஏஜெண்ட்டுக்கு, கார் நிற்கும் துல்லியமான இடம் பகிரப்படும். அதன்மூலம் உதவி பெற முடியும்.

அவசரகால தொடர்பு சேவைகள்: காரில் உள்ள SOS பட்டனை ஓட்டுநர் அழுத்தினாலோ அல்லது வாகனத்தின் மோதல் சென்சார்கள் விபத்தை கண்டறிந்தாலோ, உடனடியாக, மெர்சிடிஸ் பென்ஸின் அவசரகால உதவி மையத்தை நிர்வகிக்கும் Bosch-ற்கு தகவல் கிடைக்கப்பெற்று உடனடியாக மீட்புக்கான உதவிகள் கிடைக்கும்.

தகவல் தொடர்பு மற்றும் மீ கால் சேவைகள்: வாகனத்தில் உள்ள ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம், பொதுவான அல்லது மெர்சிடிஸ் மீ இணைப்பு தொடர்பான எந்தவிதமான தகவல்களையும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.