Union Budget 2022-23: மத்திய பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படுகிறதா? வாய்ப்பு இருக்கிறதா?
2022-23ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்ச வரம்பு உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2022-23ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்ச வரம்பு உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்தியில் 2வதுமுறையாக ஆட்சியில் இருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் கடைசி முழுமையான பட்ஜெட் இதுவாகும். 2024ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடக்கும் என்பதால் அப்போது இடைக்கால பட்ஜட்டை மட்டுமே தாக்கல் செய்ய முடியும். அந்தப் பட்ஜெட்டில் வாக்காளர்களைக் கவரும் வகையில் சலுகைகள் அறிவித்தாலும் தேர்தல் நேர வாக்குறுதியாகவே இருக்கும்.
அஞ்சலக RD-யில் மாதம் ரூ5,000 சேமித்தால் 5 ஆண்டுகளில் கிடைக்கும் தொகை தெரியுமா?
ஆதலால், இந்த பட்ஜெட்டில் வாக்காளர்களுக்கு கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடலாம் எனத் தெரிகிறது. அருண் ஜெட்லி நிதிஅமைச்சராக இருந்தபோதுதான் கடைசியாக வருமானவரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டது. அதன்பின் 4 பட்ஜெட் தாக்கலாகிவிட்டநிலையில் இதுவைர உச்ச வரம்பு உயர்த்தப்படாமல் இருக்கிறது.
இந்த பட்ஜெட்டில் வருமான உச்ச வரம்பு உயர்த்தப்படுமா என்பது மாத ஊதியம் பெறும் நடுத்தர மக்கள், உயர் நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதற்கு ஏற்றார்போல் வரிவிதிப்பு படிநிலையில் சில மாற்றங்களையும் மத்திய அரசு செய்யலாம். பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 5வது பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய உள்ளார்.
பிஎப் சந்தாரார்கள் இந்த வழியில் மட்டும் பணத்தை டெபாசிட் செய்யாதிங்க! இபிஎப்ஓ எச்சரிக்கை
இப்போதுள்ள நிலையில் ஆண்டுவருமானம் ரூ.2.50லட்சம் வரை இருந்தால் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால், மத்தியஅரசு வட்டாரங்கள் தகவலின்படி, வரும்பட்ஜட்டில் இந்த உச்ச வரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது.
கடந்த 2020ம் ஆண்டு பட்ஜெட்டில் புதிய வரிமுறையை மத்திய அரசு கொண்டுவந்தது. அதன்படி, பழைய வரிவிதிப்பு முறையில் வரிசெலுத்தலாம் அல்லதுபுதிய வரிவிதிப்பு முறையிலும் செலுத்தலாம். புதிய வரிவிதிப்புமுறையில் எந்த விலக்கும் வரி செலுத்துவோருக்கு இல்லை, எந்தவிதமான பலன்களையும் வரிசெலுத்துவோர் பெற முடியாது. வரிவிதிப்புநிலைக்கு ஏற்றார்போல் வரிப்பிடித்தம் செய்யப்படும். இந்த வரிமுறையைத்தான் மத்திய அ ரசு வரும் பட்ஜெட்டில் மாற்றும் எனத் தெரிகிறது.
மத்திய அரசு வட்டாரங்கள் தகவலின்படி
ஆண்டு வருமானம் ரூ.20 லட்சத்துக்கு மேல் இருப்போருக்கு தற்போது விதிக்கப்படும் 30% வரி 25%மாகக் குறைக்கப்படலாம்
ஆண்டுக்கு ரூ.10 முதல் ரூ.20 லட்சம்வரை வருமானம் ஈட்டுவோருக்கு தற்போது 30 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது, அது 20%மாக குறைக்கப்படலாம்.
இந்தியாவின் ஜிடிபிக்கு 10,000 கோடி பங்களித்த யூடியூபர்கள்.. லட்சக்கணக்கில் உருவான வேலைவாய்ப்புகள் !!
புதிய வரிவிதிப்பு முறையில் ஆண்டு வருமானம் ரூ.10 முதல் ரூ.20 லட்சம் வரை இருப்போருக்கு 30 சதவீதம் இருக்கும வரிவீதம் 20சதவீதமாகக் குறைக்கலாம்.
ஆண்டு வருமானம் ரூ.20லட்சத்துக்கு மேல் வருமானம் இருப்போருக்கும் புதிய வரிவிதிப்பு முறையில் கீழ் 30 சதவீதமாக இருக்கும் வரி 25 சதவீதமாகக் குறையலாம்.
- 2023 budget
- 2023 planner
- Budget 2023
- Income tax slab
- Union Budget 2022-23
- Union Budget.
- budget
- budget 2023 announcement
- budget 2023 expectation
- budget 2023 india
- budget 2023 latest news
- budget 2023 live news
- budget 2023 news
- budget workbook
- india budget 2023
- national budget
- national budget 2023
- new tax slabs budget 2023
- tax relief
- tax slabs
- union budget
- union budget 2022-23 date
- union budget 2023