இந்தியா சிமெண்ட்ஸில் முக்கிய பங்குகளை வாங்கும் அல்ட்ராடெக்! குட்பை சொல்லும் என்.சீனிவாசன்!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கு உள்ள அல்ட்ராடெக்கின் ஒரே அலகு 1.4 மில்லியன் டன் திறன் கொண்டது. ஆனால், இந்தியா சிமெண்ட்ஸ் 6 மில்லியன் டன் திறன் கொண்ட அலகுகளைக் கொண்டிருக்கிறது.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் என் சீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான ரூ.3,954 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் அல்ட்ராடெக் சிமிமெண்ட்ஸ் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.
கோடீஸ்வரர் குமார் மங்கலம் பிர்லாவின் ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக் சிமெண்ட், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தில் சுமார் 33% பங்குகளை வாங்க உள்ளது. ஒரு பங்கிற்கு ரூ. 390 என வீதம் விலை கொடுக்க முடிவு செய்துள்ளது. முன்னதாக ஜூன் மாதத்தில் 23% பங்குகளை அல்ட்ராடெக் வாங்கியிருந்தது.
மேலும் அல்ட்ராடெக் இந்தியாவின் கையகப்படுத்தும் விதிமுறைகளுக்கு ஏற்ப அதே விலையில் 26% பங்குகளை இந்தியா சிமெண்ட்ஸின் பொது பங்குதாரர்களும் வாங்குவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும். இதனால் அல்ட்ராடெக்கின் மொத்த செலவு ரூ.7,100 கோடியாக உயரும்.
இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், அல்ட்ராடெக் தமிழ்நாட்டில் மீண்டும் கால் பதிக்கும். சுண்ணாம்புக்கல் பற்றாக்குறை காரணமாக அல்ட்ராடெக் நிறுவனம் தமிழ்நாட்டில் அதிக அக்கறை காட்டாமல் இருந்தது. அதன் கடைசி அலகு ஆகஸ்ட் 1998 இல் தான் வாங்கப்பட்டது.
Earn on Instagram: இன்ஸ்டாகிராம் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? ஈசியான 5 வழிகள் இதோ!
அல்ட்ராடெக் தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் முழுவதும் பரவலாக ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தியா சிமெண்ட்ஸின் 14.5 மில்லியன் டன் உற்பத்தித் திறனை அதன் தற்போதைய 153 மில்லியன் டன் உற்பத்தித் திறனுடன் சேர்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியா சிமெண்ட்ஸில் பணிபுரியும் 1,855 ஊழியர்களும் கிடைப்பார்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கு உள்ள அல்ட்ராடெக்கின் ஒரே அலகு 1.4 மில்லியன் டன் திறன் கொண்டது. ஆனால், இந்தியா சிமெண்ட்ஸ் 6 மில்லியன் டன் திறன் கொண்ட அலகுகளைக் கொண்டிருக்கிறது.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் 1946 இல் எஸ்.என்.என். சங்கரலிங்க ஐயர் மற்றும் டி.எஸ். நாராயணசாமி ஆகியோரால் நிறுவப்பட்டது. திருநெல்வேலியில் சுண்ணாம்புக் கல் வளமாக இருப்பதை அறிந்த இவர்கள் சங்கர் சிமெண்ட் என்ற ஆலையை உருவாக்கினர். நாராயணசாமியின் மகன் என். சீனிவாசன் சங்கரலிங்க ஐயரின் பேத்தி சித்ராவை மணந்த பிறகு அவர்களின் வணிக உறவு குடும்ப உறவாக மாறியது.
1968 இல் தந்தை நாராயணசாமி இறந்த பிறகு சீனிவாசன் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். தற்போது 79 வயதான சீனிவாசன் உடல்நலப் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார். மேலும் அவரது மனைவி மற்றும் மகள் ரூபா குருநாத் இருவரும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் மூவரும் தொழிலில் இருந்து விலகுவார்கள் என்று தெரிகிறது.
200 கிலோ தங்க நகைகளை அணிந்து நடித்த ஐஸ்வர்யா ராய்! டிசைன் செய்தவர்கள் யார் தெரியுமா?