சர்வதேச சூழல், ரஷ்யா, உக்ரைன் பிரச்சினையால் ஏற்பட்ட பதற்றம்,கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றின் எதிரொலியால் மும்பை, தேசியப்பங்குச்சந்தையில் இந்த ஆண்டில் சந்தித்தார பெருவீழ்ச்சியை இன்று சந்தித்தன.
சர்வதேச சூழல், ரஷ்யா, உக்ரைன் பிரச்சினையால் ஏற்பட்ட பதற்றம்,கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றின் எதிரொலியால் மும்பை, தேசியப்பங்குச்சந்தையில் இந்த ஆண்டில் சந்தித்தார பெருவீழ்ச்சியை இன்று சந்தித்தன.
முதலீட்டாளர்கள் பங்குகளில் செய்த முதலீட்டை எடுத்து, தங்கம், கச்சா எண்ணெய், வெள்ளி ஆகியவற்றில் முதலீட்டை செலுத்தியதால், காமாடிட்டி மார்க்கெட் 2 சதவீதம் உயர்ந்தது.
இன்று காலை வாரத்தின் முதல்நாளே மும்பை, தேசியப் பங்குச்சந்தைக்கு பெருத்த அடியாக இருந்தது. சர்வதேச காரணிகள், ரஷ்யா உக்ரைன் மீது எந்த நேரம் வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் என்ற அச்சம், கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்வு போன்றவை பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கியதும் ஆட்டம் காணச் செய்தன.

ஐரோப்பிய நாடுகளுக்கு பெருமளவு இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெயை ரஷ்யாதான் சப்ளை செய்து வருகிறது. உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியிலும் ரஷ்யா 5 % கையில் வைத்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால், அது கச்சா எண்ணெய் விலையை மேலும் உயர்த்தும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கு பெரும் தட்டுப்பாடு வரும் என்பதால், முதலீ்ட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ததை திரும்பப் பெற்றனர். மாறாக கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளியில் முதலீட்டை செலுத்தினர்.
ஏற்கெனவே கச்சா எண்ணெய் ஒரு பேரல்கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவு 94 டாலராக உயர்ந்துவிட்டது. இந்த சூழலில் போர் ஏதேனும் ஏற்பட்டால் வரலாறு காணதஅளவில் கச்சா எண்ணெய் விலை உயரக்கூடும் என வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்
மும்பை பங்குச்சந்தையில் இன்று வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் புள்ளிகள் 1,857 புள்ளிகள் வரை சரிந்தாலும் வர்த்தகம் முடிவில் 1747 புள்ளிகள் வீழ்ந்து, 56,406 புள்ளிகளில் முடிந்தது.

தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 532 புள்ளிகள் சரிந்து 16,850 புள்ளிகளில் முடிந்தது. கடந்த 10 மாதங்களில் இல்லாத வீழ்ச்சியை என்எஸ்இ கண்டது. இன்று ஒரே நாளில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு ரூ.8.50 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இரு நாட்களில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான சென்செக்ஸ் புள்ளிகள் குறைந்தன.
மிட்கேப், ஸ்மால் கேப் முறையே 3.5%, 4% சரிந்தன. பொதுத்துறை வங்கி, ரியல்எஸ்டேட், தனியார் வங்கி, நிதிச்சேவை, வங்கி, ஆட்டமொபைல் துறை, மருந்துத்துறை, ஐடி ஆகிய துறைகளின் பங்குகள் பெருத்த அடிவாங்கின.
மும்பை பங்குச்சந்தையில் டிசிஎஸ் நிறுவனப் பங்குகள் லாபத்தில் முடிந்தன. டாடா ஸ்டீல், ஹெச்டிஎப்சி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, இன்டஸ்இன்ட் வங்கி, கோடக் வங்கி, மாருதி, லார்சன் அன்ட் டூப்ரோ, ஆக்சிஸ் வங்கி, பார்திஏர்டெல், விப்ரோ, ஐடிசி, ஹெச்டிஎப்சி ஆகிய பங்குகள் மோசமாகச் சரிந்தன.

தேசியப்பங்குச்சந்தையில் ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஸ்ரீ சிமென்ட், யுபிஎல் ஆகிய பங்குகள் சரிந்தன. அதானிபவர், எல்ஐசி ஹவுசிங், யூனியன் வங்கி, ஆதித்யா பிர்லா பேஷன், அசோக் லேலண்ட், பிக்ஸ் டிரான்ஸ்மிஷன், அக்ஸ்டெல் இன்ட்ஸட்ரீஸ், மெட்ரோபாலிஸ் ஹெல்த், க்ளோபஸ் ஸ்பிரிட்ஸ் 20% சரிந்தன
