Asianet News TamilAsianet News Tamil

crude oil: எங்களக்கு இந்தியா இருக்கு! குறைந்த விலையில் கச்சா எண்ணெய் விற்க ரஷ்யா முடிவு?

crude oil: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவுக்கு குறைந்தவிலையில் கச்சா எண்ணெயை விற்பனை செய்ய ரஷ்ய நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

Ukraine crisis: Russian oil companies offer big discounts to India
Author
Moscow, First Published Mar 9, 2022, 12:56 PM IST

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவுக்கு குறைந்தவிலையில் கச்சா எண்ணெயை விற்பனை செய்ய ரஷ்ய நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்திய முதலீடு

அதேசமயம், ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்ட அனைத்து இறக்குமதிக்கும் அமெரிக்கா நேற்று தடைவிதித்தது. ஆனால், ரஷ்யாவில் உள்ள எரிசக்தி துறையில் இந்தியா சார்பில் 1600 கோடி டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளதால்,அதை இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் கண்காணித்து வருகின்றன

Ukraine crisis: Russian oil companies offer big discounts to India

தடை

ரஷ்யா மீதுவிதிக்கப்பட்டுள்ள இந்தத் தடையால் ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களின் ஏற்றுமதி பாதிக்கும். அவ்வாறு பாதி்க்கப்பட்டால், முதலீடு செய்துள்ள இந்திய நிறுவனங்களுக்கு உரிய ஈவுத்தொகையை வழங்குவதில் சிக்கல்வரலாம் என்பதால், இ்ந்தியா கண்காணித்து வருகிறது
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நேற்று விதித்த ரஷ்யா மீதான தடைக்குப்பின் சர்வதேச சந்தையில் பிரன்ட் கச்சா எண்ணெய் பேரல் 131 டாலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் 126 டாலராகவும் உயர்ந்தது. 

விலை உயரும்

இந்தியாவைப் பொறுத்தவரை ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதி குறைவுதான். ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பெருமளவு ரஷ்யாவின் இறக்குமதியைத்தான் நம்பியுள்ளன. ரஷ்யாவிலிருந்து இறக்குமதிக்கு தடை விதிக்ககப்பட்டுள்ள நிலையில் வரும் நாட்களில் கச்சா எண்ணெய் விலை உயரக்கூடும்.

Ukraine crisis: Russian oil companies offer big discounts to India

குறைந்தவிலை

உலகிலேயே கச்சா எண்ணெயை அதிகமாக நுகரும் நாடுகளில் 3-வதாக இருக்கும் இந்தியா, ரஷ்யாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில் அதிகமான முதலீடு செய்துள்ளது. ரஷ்யா மீதான தடையால், இந்தியாவுக்கு குறைந்துவிலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ரோஸ்நெப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத தகவல்கள் தெரிவிக்கின்றன.

Ukraine crisis: Russian oil companies offer big discounts to India

இந்த ரோஸ்நெப்ட் நிறுவனத்தின் நயாரா எனர்ஜி நிறுவனம்தான் குஜராத்தில் வதிநகரில் எண்ணெய் சுத்திகரிப்புஆலையை நிறுவி நடத்தி வருகிறது. இந்தியாவுக்கு சர்வதேச விலையிலிருந்து 27 சதவீதம் வரை குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வழங்க தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் டாலர் பரிமாற்றத்துக்கும் ரஷ்யாவுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், இந்தியா, ரஷ்யா இடையிலான வர்த்தகத்தை எவ்வாறு நடத்துவது குறித்தும் பேச்சு நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
 

Follow Us:
Download App:
  • android
  • ios