tvs logistics bought new company from ingland
கலக்கும் டிவிஎஸ் லாகிஸ்டிக்ஸ் நிறுவனம்....!
டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ்
பிரபல டிவிஎஸ் நிறுவனமானது, அதன் கிளை இங்கிலாந்து பிரிவான டிவிஎஸ் ரிகோ சப்ளை செயின் சர்வீசஸ், தற்போது இங்கிலாந்தை சார்ந்த எஸ்பிசி இண்டர்நேஷ்னல் நிறு வனத்தை வாங்கி உள்ளது .
அதற்காக , அந்த நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை டிவிஎஸ் ரிகோ சப்ளை செயின் சர்வீசஸ் வாங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, கையப்படுத்தப்பட்டுள்ள எஸ்பிசி நிறுவனத்தின் ஆண்டு பரிவர்த்தனை 165 கோடியாகும் .
அதே வேளையில் எஸ்பிசி நிறுவனத்தின் கையகப்படுத்துதலுக்கான தொகை மற்றும் வளர்ச்சிக்காக செலவு செய்யும் தொகை கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதர கிளைகள்
எஸ்பிசி இண்டர்நேஷ்னல் நிறுவனத்திற்கு , இங்கிலாந்து மட்டுமல்லாமல் பிரான்ஸ், ஸ்லோவாக்கியா, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளிலும் இதன் பிரிவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
