Asianet News TamilAsianet News Tamil

உலகின் டாப் 10 பணக்கார பெண்கள்.. இந்தியாவின் சாவித்ரி ஜிண்டாலுக்கு எந்த இடம்?

ஃபோர்ப்ஸின் படி, உலகின் டாப் 10 10 பணக்கார பெண்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Top 10 richest women in the world in 2024 know India's Savitri Jindal stand Rya
Author
First Published Jun 13, 2024, 9:30 AM IST

உலகளவில் முதல் 10 பணக்காரர்களில் பெண்கள் இல்லை என்றாலும், பல பெண்கள் உலகளவில் குறிப்பிடத்தக்க செல்வத்தை குவித்து வருகின்றனர். பெண் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஃபோர்ப்ஸின் படி, உலகின் டாப் 10 10 பணக்கார பெண்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

உலகின் பெரும் பணக்கார பெண்கள் பட்டியலில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக உலகின் பணக்கார பெண்மணி என்ற பட்டத்தை பிரான்சுவா பெட்டன்கோர்ட் மேயர்ஸ் பெற்றுள்ளார்.இவர் L'Oréal நிறுவனரின் பேத்தி ஆவார். இவரின் சொத்து மதிப்பு $98.2 பில்லியன் டாலராகும். அவரின் சொத்து L'Oréal குழுமத்தின் கிட்டத்தட்ட 35% பங்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. 

இரண்டாவது இடத்தில் அமெரிக்காவின் பணக்கார பெண்மணி ஆலிஸ் வால்டன் (Alice Walton) உள்ளார். இவரின்  72.7 பில்லியன் டாலராகும். கடந்த ஆண்டில் வால்மார்ட்டின் பங்கு விலையில் 34% அதிகரித்ததன் காரணமாக வால்டனின் செல்வம் உயர்ந்தது. 

DA hike : வங்கி ஊழியர்களுக்கு மளமளவென அதிகரிக்கும் அகவிலைப்படி.. மே, ஜூன், ஜூலை மாதங்களில் எவ்வளவு?

ஜூலியா கோச் (Julia Koch) 66.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக பணக்கார பெண்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். கோச் இண்டஸ்ட்ரீஸில் 42% பங்குகளைப் பெற்ற அவர், எண்ணெய் சுத்திகரிப்பு, மருத்துவத் தொழில்நுட்பம் மற்றும் காகிதத் தயாரிப்புகளில் ஆர்வமுள்ள பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

ஜாக்குலின் மார்ஸ், (Jacqueline Mars) 38.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் நான்காவது இடத்தில் உள்ளார். அவரது குடும்பத்துடன், M&Ms, Snickers மற்றும் Pedigree போன்ற பிராண்டுகளுக்கு செல்லப்பிராணி உணவு நிறுவனத்தை அவர் வைத்திருக்கிறார். Mars Inc. உலகின் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் ஒன்றாகும், இதன் வருவாய் $35 பில்லியனைத் தாண்டியுள்ளது.

மெக்கென்சி ஸ்காட், 37.7 பில்லியன் டாலர் மதிப்புடன் இந்த பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கிறார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவி இவர், அவரின் விவாகரத்தைத் தொடர்ந்து, அவர் அமேசானில் 4% பங்குகளைப் பெற்றார். மேலும் கல்வி, அறிவியல் மற்றும் கலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பில்லியன்களை நன்கொடையாக அளித்துள்ளார். 

இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 6.6 சதவீதமாக உயர்த்திய உலக வங்கி!

இந்தியாவின் பணக்காரப் பெண்மணியான சாவித்ரி ஜிண்டால் 35.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்த பட்டியலில் 6-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஜிண்டால் குழுமத்திற்கு தலைமை தாங்கும் அவர் எஃகு, மின்சாரம், சிமெண்ட் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற வணிகங்களை மேற்பார்வையிடுகிறார்.

ரஃபேலா அபோன்டே-டயமண்ட் (Rafaela Aponte-Diamant) 33.3பில்லியன் நிகர மதிப்புடன், இந்த பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கிறார். இவர் உலகின் மிகப்பெரிய ஷிப்பிங் லைனான MSCயை தனது கணவர் ஜியான்லூகி அபோன்டேவுடன் இணைந்து நிறுவினார். அவர்களின் நிறுவனம் 1970 இல் தொடங்கப்பட்டது, உலகளாவிய கப்பல் துறையில் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு வளர்ந்துள்ளது.

மிரியம் அடெல்சன் (Miriam Adelson), 32.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன், இந்த பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கிறார். இவர் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மருந்து கண்டுபிடிப்புகளுக்கு 1 பில்லியன் டாலருக்கும் மேல் நன்கொடை அளித்துள்ளார்.

ஜினா ரைன்ஹார்ட் (Gina Rinehart) 30.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் டாப் 10 உலக பணக்கார பெண்கள்பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கிறார்., ஹான்காக் ப்ராஸ்பெக்டிங் குழுமத்தின் தலைவராக உள்ளார், இது ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு முக்கிய சுரங்க மற்றும் விவசாய நிறுவனமாகும்

அபிகாயில் ஜான்சன் (Abigail Johnson) , 29.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன், அவர் இந்த பட்டியலில் 10-வது இடத்தில் இருக்கிறார். மிகப்பெரிய நிதி நிறுவனமான ஃபிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தை வழிநடத்துகிறார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios