விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம்   நடைபெற உள்ளது. இதில் அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் தவிர மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க  உள்ளனர்.  மேலும்  இந்த போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

யாரெல்லாம் ஆதரவு ?

திமுக அழைப்பு விடுத்துள்ள இந்த பந்த்திற்கு காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பாமக, தமிழ் மாநில காங்கிரஸ்,பங்கேற்காது என அக்கட்சியின் தலைவர் வாசன் அறிவித்துள்ளார்.

எதெல்லாம் இயங்காது ?

நாளை நடைப்பெறும் முழு அடைப்பு போரட்டத்திற்கு வணிகர் சங்கங்கள் ஆதரவு தருவதாக அறிவித்துள்ளன. இதனால் கடைகள், ஓட்டல்கள் அடைக்கப்பட்டிருக்கும்.

சினிமா தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பந்த்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகளைச் சேர்ந்த அரசு போக்குவரத்து கழக ஊழியர்களும் போராட்டத்தில் பல்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

சென்னையில் ஆட்டோக்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கம் போல் இயங்குவது எது  ?

தமிழகத்தில் பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் இயங்கும் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஆளும் கட்சியை சேர்ந்த போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தினரைக் கொண்டு பாதுகாப்பான முறையில் பஸ்களை வழக்கம் போல் இயக்க அரசு முடிவு செய்துள்ளது.

போலீஸ் பாதுகாப்புடன் பஸ்களை இயக்குவதற்காக ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

நாளை தங்கு தடையின்றி ஆவின் பால் கிடைக்கும் என பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி   தெரிவித்துள்ளார்.

சென்னையில் மட்டும் 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் மத்திய  அரசு அலுவலங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பெட்ரோல் பங்க் வழக்கம் போல் இயங்கும் –  பெட்ரோல்  பங்கில்  வேலை செய்யும் தொழிலாளர்கள்  கருப்பு பேட்ஜ் அணிந்து பணி புரிவார்கள் என பெட்ரோலிய பொருட்கள் வணிகர் சங்கத்தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.