சுங்கசாவடியில் கட்டணம் இல்லாமல் செல்லும் வாகனங்கள்....!!! 500, 1000 ரூபாய் நோட்டு எதிரொலி.....!!
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நேற்றிரவு மோடி அறிவித்தார். இதனை தொடர்ந்து இன்றும் நாளையும் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் மையங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சில்லறை கிடைக்காததால், சுங்க சாவடிகளில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க , கட்டணம் இல்லாமல் பல வாகனங்களை இலவசமாக அனுபியுள்ளது வாலாஜாபாத் மற்றும் உள்ளுந்துர்பெட்டை சுங்க சாவடிகள்......!
நல்லது தான் ... தொடர்ந்து அதிக கட்டணத்தை வசூலித்து வரும் சுங்கசாவடிகள், இந்த இரண்டு நாட்களாவது மக்கள் நலன் கருதியும், போக்குவரத்து நெரிசலையும் தவிர்க்கும் பொருட்டும் , கட்டணம் இல்லாமல் பல வாகனங்களை அனுப்புவது வரவேற்கலாம்......!!!
