இந்திய பங்கு வர்த்தகம்:

வாரத்தின் ஐந்தாவது வர்த்தக தினமான இன்று  இந்திய பங்கு வர்த்தகத்திற்கு  விடுமுறை  விடப்பட்டுள்ளது. அதாவது  இந்தியா  முழுவதும் இன்று மகாசிவராத்திரி  வெகு விமரிசையாக  கொண்டாடப்பட்டு வருவதால், இந்திய  பங்கு வர்த்தகத்திற்கு  விடுமுறை விடப்பட்டுள்ளது.  

மற்ற சந்தை:

பங்குகள், அந்நிய செலாவணி, பணம் மற்றும் கமாடிட்டி சந்தைகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த  5  நாட்களாகவே  இந்திய பங்கு வர்த்தகம்  ஏறுமுகத்தில்  முடிவுற்றது. இதனிடையே, ரிலையன்ஸ்  ஜியோ, பல  சலுகைகளை  அறிவித்தால், கடந்த  இரண்டு நாட்களாகவே  இந்திய  பங்கு வர்த்தகம்  தொடர்ந்து ஏறுமுகத்தில்   இருப்பதற்கு  ஒரு காரணமாக  அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது