மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை, அந்நியச் செலாவணிச் சந்தை ஆகியவை இன்று இயங்காது, வர்த்தகம் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை, அந்நியச் செலாவணிச் சந்தை ஆகியவை இன்று இயங்காது, வர்த்தகம் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகை முடிந்து 4வதுநாள் தீபாவளி பலிபிரதிபடா கொண்டாடப்படுவதையடுத்து, இன்று பங்குச்சந்தைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் பங்குச்சந்தைக்கு விடப்படும் 3வது விடுமுறையாகும். 

டவ் ஷாம்பு உள்பட ட்ரை ஷாம்பு வகைகளை திரும்பப் பெறும் யூனிலீவர் நிறுவனம்: என்ன காரணம்?

கரன்ஸி சந்தையும், கமாடிட்டி சந்தையும் காலை 9 மணி முதல் 5 மணிவரை மூடப்படும் வர்த்தகம் ஏதும் நடக்காது. ஆனால், மாலை 5 மணி முதல் இரவு 11:30 மணிவரை கமாடிட்டி சந்தை மட்டும் இயங்கும். 

தீபாவளியன்று எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை, ஆனால் முகூர்த்த வர்த்தகத்துக்காக மட்டும் மாலை 6.15 முதல் 7.15 வரை வர்த்தகம் நடந்தது. ஒரு மணிநேர வர்த்தகத்தில் மும்பைப்பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 524 புள்ளிகள் உயர்ந்தது, தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 154 புள்ளிகள் உயர்ந்தது. 

இந்த ஆண்டில் பங்குச்சந்தைக்கு கடைசி விடுமுறை என்பது நவம்பர் 8ம் தேதி வருகிறது, அன்றைய தினம் குருநானக் ஜெயந்தி. இந்தத் தகவல் பங்குச்சந்தை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 நாட்களுக்குப்பின் சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை: சென்செக்ஸ் 288 புள்ளிகள் வீழ்ச்சி

செவ்வாய்கிழமை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 288 புள்ளிகள் சரிந்து, 59,543 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 74 புள்ளிகள் குறைந்து, 17,656 புள்ளிகளில் நிலைபெற்றது.