Asianet News TamilAsianet News Tamil

gold rate today : தங்கம் விலை சவரணுக்கு ரூ.200 குறைவு; ஜூன் 7ம் தேதி நிலவரம் என்ன?

gold rate today:ஆபரணத் தங்கத்தின் விலை இன்று  குறைந்துள்ளது. கிராமுக்கு 25 ரூபாயும், சவரணுக்கு ரூ.200 சரிந்துள்ளது

Today Gold Rate : Gold rate in India falls by Rs 200 22k
Author
Chennai, First Published Jun 7, 2022, 11:56 AM IST

gold rate today:ஆபரணத் தங்கத்தின் விலை இன்று  குறைந்துள்ளது. கிராமுக்கு 25 ரூபாயும், சவரணுக்கு ரூ.200 சரிந்துள்ளது

 சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றுவரை கிராம் ரூ.4,785க்கும், சவரண் ரூ.38,280க்கு விற்பனையானது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.4,760 ஆகவும், சவரணுக்கு, ரூ. 200 உயர்ந்து, ரூ.38 ஆயிரத்து80க்கும் விற்பனையாகிறது. 

Today Gold Rate : Gold rate in India falls by Rs 200 22k

தங்கத்தின் விலை கடந்த 10 நாட்களில் கிராமுக்கு ரூ.10 முதல் ரூ30 வரை மட்டுமே உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.  ரொக்கமாக மாற்றக்கூடிய வகையில் தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்ததாகும். 

அமெரிக்கச் சந்தையில் கடன் பத்திரங்களுக்கு எதிராக டாலர் மதிப்பு உயரவில்லை என்பதாலும், இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக பெரிதாக சரிவைச் சந்திக்கவில்லை என்பதாலும் தங்கத்தின் விலையில் பெரிதாக மாற்றம் ஏதும் இல்லை. கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் மேலும் அதிகரி்த்தால் தங்கத்தின் விலையில் வரும் நாட்களில் மாற்றம் வரலாம். 

Today Gold Rate : Gold rate in India falls by Rs 200 22k

கடந்த மே 29-ம் தேதியிலிருந்து இன்றுவரை 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4,775 முதல் ரூ.4,785க்குள் இருந்து வருகிறதே தவிர பெரிதாக மாற்றம் இல்லை. இந்த நேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கும் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.  

வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 80பைசா குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ரூ.67.70 க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.67,700க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ.800 குறைந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios