Gold Rate Today: தாறுமாறாக உயரும் தங்கம்..இப்போதைக்கு வாங்காதீங்க மக்களே! எவ்வளவு விலை தெரியுமா ?
Gold Rate Today : உக்ரைன் மீது ரஷ்யா போர் எதிரொலியால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெருக்கடியில் பொருளாதாரம்
அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா எதிர்க்கிறது. இதனால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து . இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
தங்க விலை
இந்நிலையில், இன்று தங்கம் விலை கிடுவிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,775-க்கு விற்பனையாகிறது. பவுன் ரூ.38,200-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை
ஒரு கிராம் வெள்ளி ரூ.67-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 67,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : PMK : பாமக தலைவர் ஆகிறார் அன்புமணி.! அப்போ ஜி.கே மணி நிலைமை ? பக்கா பிளான் போட்ட ராமதாஸ் !
இதையும் படிங்க : "ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதித்துள்ளார்" பிரதமர் மோடி - ஸ்டாலின் விழாவில் புது சர்ச்சை.!