சர்வதேச பொருளாதார சூழல் காரணமாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக உள்ளது. இன்று தங்கம் சவரனுக்கு ரூ. 1,000 உயர்ந்து, சென்னையில் ரூ. 72,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் ஏற்பட்டு வரும் பொருளாதார சூழல் காரணமாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. நேற்று தங்கத்தின் விலை சற்று அதிகரித்த நிலையில், இன்று மீண்டும் விலை அதிகரித்துள்ளது.

அதன்படி இன்று (மே 6) தங்கம் சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு அடைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்ந்து ரூ. 72,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல தங்கம் கிராமுக்கு ரூ.125 உயர்ந்து ரூ.9,025-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


