Today gold rate in tamilnadu : உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக தங்கம் வாங்குவதிலும் தற்போது பல குழப்பங்கள் உள்ளன. இந்த நெருக்கடியால் உலகளாவிய தங்க சந்தையில் மிகப்பெரிய ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. 

சிக்கலில் பொருளாதாரம் :

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா எதிர்க்கிறது. இதனால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து . இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 

தங்கம் விலை :

இந்நிலையில், இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.34 அதிகரித்து ரூ. 4.884-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.272 அதிகரித்து ரூ.39,072-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை :

ஒரு கிராம் வெள்ளி ரூ. 68.80-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.68,800 விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : TASMAC : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! டாஸ்மாக் கடைகளுக்கு மீண்டும் விடுமுறை..எப்போ தெரியுமா ?