கடந்த வாரம் உயர்ந்த தங்கத்தின் விலை, இன்று குறைந்துள்ளது.
கடந்த வாரம் தங்கத்தின் தேவை அதிகரித்ததால் , அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பீதியாலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும், கொரோனா எதிரொலியாக வங்கி வட்டி விகிதங்கள் பெருமளவு குறைந்துள்ளன. இதனால் அந்நாடுகளின் முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்கள் தங்கத்தை வாங்கி வருகின்றன. இதனால் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.

இன்றைய தங்கம் விலை 8 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் (22 காரட்) 4,514 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கத்தின் விலை (22 காரட்) 64 ரூபாய் குறைந்து 36,112 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. 24 காரட் தங்கமும் ஒரு கிராம் 8 ரூபாய் குறைந்து 4,925 ரூபாயாகவும், ஒரு சவரன் 64 ரூபாய் குறைந்து 39,400 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு 10 பைசா குறைந்து, ரூ 65.50-க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூபாய் 100 குறைந்து, ரூ. 65,500 க்கும் விற்பனை ஆகிறது.
