Today gold rate in tamilnadu : தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான அமெரிக்க டாலரின் மதிப்பானது வலுவான ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது தங்கம் விலையானது ஏற்றம் காணுவதை தடுத்துள்ளது. எனினும் மறுபுறம் ஏற்றம் கண்டு வந்த பத்திர சந்தையானது மீண்டும், சரிவினைக் கண்டுள்ளது.  

அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக சர்வதேச பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. எனினும் சீனா மற்றும் இந்தியாவில் தங்கத்தின் தேவை குறித்து உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றது. உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக தங்கம் வாங்குவதிலும் தற்போது பல குழப்பங்கள் உள்ளன. இந்த நெருக்கடியால் உலகளாவிய தங்க சந்தையில் மிகப்பெரிய ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது.

இன்றைய தங்க விலை :

இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,903 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரணத் தங்கம் 48 ரூபாய் அதிகரித்து, 39,224 ஆக அதிகரித்து உள்ளது.

இன்றைய வெள்ளி விலை :

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.69.50 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 69,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : இனி சனிக்கிழமை விடுமுறை கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த தமிழக அரசு!