கடந்த சில வாரங்களாக, உலகளாவிய காரணிகள், சர்வதேச சந்தையின் நிலை, மக்களின் வாங்கும் திறன் ஆகியவற்றுக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் மாற்றத்தைக் கண்டு வருகிறோம்.
எனினும், வரும் காலங்களில் தங்கத்தின் விலையில், ஏறுமுகமே நிலைக்கும் என்கிறார்கள் சந்தை வல்லுனர்கள். உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக தங்கம் வாங்குவதிலும் தற்போது பல குழப்பங்கள் உள்ளன. இந்த நெருக்கடியால் உலகளாவிய தங்க சந்தையில் மிகப்பெரிய ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது.

இன்றைய தங்க விலை :
இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,965 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரணத் தங்கம் 152 ரூபாய் அதிகரித்து, 39,720 ஆக அதிகரித்து உள்ளது.

இன்றைய வெள்ளி விலை :
சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.72.10 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 72,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : TN Corona : தமிழகத்தை அச்சுறுத்தும் கொரோனா.. உஷார் மக்களே ! முகக்கவசம் அவசியம்.!!
