Gold Rate Today : ரஷ்யா மீதான பொருளாதார தடைகள், பெரும்பாலான பொருட்களின் விலையை உயர்த்துவதற்கு வழிவகுக்கும் என்று கணிக்கப்பட்டது போன்றே உலகம் முழுவதும் விலை உயர்வை ஏற்படுத்தி உள்ளது. 

தங்கத்தை வாங்குவதில் பெண்களின் ஆர்வம் என்றைக்கும் குறைந்ததில்லை. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன ? என்று பார்க்கலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இன்றைய தங்க விலை :

இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,816 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இதன் விலை 4,803 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 38,424 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 104 ரூபாய் அதிகரித்து 38,528 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இன்றைய வெள்ளி விலை :

தங்கம் விலை இன்று அதிகரித்தாலும், வெள்ளி விலை சற்று குறைந்து உள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.71 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 71,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : lic ipo date: எல்ஐசி ஐபிஓ மே மாதத்தில் நடத்த மத்திய அரசு திட்டம்?